கடற்படை கட்டளைகளுக்கு இடையிலான நீச்சல் மற்றும் நீர் பந்து போட்டித்தொடர் இலங்கை கடற்படை கப்பல் கெமுணு நிறுவனத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தது
கடற்படை கட்டளைகளுக்கு இடையிலான நீச்சல் மற்றும் நீர் பந்து போட்டித்தொடர், 2026 ஆகஸ்ட் 23 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை இலங்கை கடற்படை கப்பல் கெமுணு நிறுவனத்தின் நீச்சல் தடாத்தில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன், இப்போட்டித் தொடரின் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இரட்டை சாம்பியன்ஷிப் பட்டங்களை பயிற்சி கட்டளைப் பிரிவு வென்றுள்ளது.
அதன்படி, அனைத்துக் கட்டளைப் பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் இருநூறு (200) வீர, வீராங்கனைகள் பங்கேற்ற கடற்படை கட்டளைகளுக்கு இடையிலான நீச்சல் மற்றும் நீர் பந்து போட்டித் தொடரின் நீச்சல் பிரிவில், சிறந்த வீரருக்கான கிண்ணத்தை கப்பற்படை கட்டளைப் பிரிவின் சப் லெப்டினன்ட் எச்ஆர்எல் பெரேராவும், சிறந்த வீராங்கனைக்கான கிண்ணத்தை மேற்கு கடற்படை கட்டளைப் பிரிவின் வுமன் ஏபல் சீமன் பிஎன்என் பியசிரியும் வென்றனர். மேலும், சிறந்த ஆரம்பநிலை நீச்சல் வீரருக்கான கிண்ணத்தை கிழக்கு கடற்படை கட்டளைப் பிரிவின் ஓடினரி சீமன் டப்ஜிசிகே குமாரவும், சிறந்த ஆரம்பநிலை நீச்சல் வீராங்கனைக்கான கிண்ணத்தை அதே கட்டளைப் பிரிவின் வுமன் ஓடினரி சீமன் ஏஎச்எச்ஐஎச் சம்பத்தும், போட்டியின் சிறந்த மூத்த வீரருக்கான கிண்ணத்தை தெற்கு கடற்படை கட்டளைப் பிரிவின் சீப் பெடி ஒபிசர் கேஏஎஸ் குமாரவும் தமதாக்கிக் கொண்டனர்.
போட்டித் தொடரின் நீர் பந்து பிரிவில், சிறந்த வீரருக்கான கிண்ணத்தை பயிற்சி கட்டளைப் பிரிவின் லீடிங் டைவர் ஏஎன்எஸ் ஆரியவன்சவும், சிறந்த வீராங்கனைக்கான கிண்ணத்தை அதே கட்டளைப் பிரிவின் வுமன் ஓடினரி சீமன் பிஏகேஎன் குமரியும் வென்றெடுத்தனர்.