Sri Lanka Navy – Official Logo
SPORT NEWS 2026

கட்டளைகளுக்கிடையிலான மேசைப் பந்து போட்டி - 2026 வெற்றிகரமாக நிறைவடைந்தது

07 Sep 2026

2026 கட்டளைகளுக்கிடையிலான மேசைப்பந்து போட்டித் தொடர், இலங்கை கடற்படைக் கப்பல் கெமுணு நிறுவனத்தின் கொமாண்டர் பராக்கிரம சமரவீர நினைவு உள்ளக விளையாட்டு அரங்கில் 2026 செப்டம்பர் 03 முதல் 05 ஆம் திகதி வரை வெற்றிகரமாக நடைபெற்றது. இதன் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை மேற்கு கடற்படை கட்டளை வென்றெடுத்ததுடன், ஆண்களுக்கான இரண்டாம் இடத்தை கப்பற்படை கட்டளையும் பெண்களுக்கான இரண்டாம் இடத்தை பயிற்சி கட்டளையும் கைப்பற்றின.

இதற்கமைய, இப்போட்டித் தொடரில் அனைத்து கடற்படை கட்டளைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி 08 ஆண்கள் அணிகளும் 07 பெண்கள் அணிகளும் பங்கேற்றன. இதில் பெண்களுக்கான திறந்த ஒற்றையர் பிரிவின் சாம்பியன் பட்டத்தை லெப்டினன்ட் கொமாண்டர் கேஏசி கருணாரத்ன வென்றதுடன், ஆண்களுக்கான திறந்த ஒற்றையர், சிறந்த அறிமுக வீரர் மற்றும் ஆண்டின் வளர்ந்து வரும் வீரர் ஆகிய மூன்று சாம்பியன் பட்டங்களையும் மருத்துவ லெப்டினன்ட் டிடிடிஎல் சபரமாது கைப்பற்றினார். மேலும், சிறந்த அறிமுக வீராங்கனை மற்றும் ஆண்டின் வளர்ந்து வரும் வீராங்கனையாக வுமன் ஓடினரி சீமன் டிடப்ளியூஏஎன்என் விஜேசிங்க விருதுகளைப் பெற்றுக் கொண்டார்.

மேலும், இப்போட்டித் தொடரின் பரிசளிப்பு விழாவில் தன்னார்வ கடற்படையின் தளபதியும் மேற்கு கடற்படை கட்டளையின் பிரதித் தளபதியுமான கொமடோர் அருண விஜேவர்தன, விளையாட்டுப் பணிப்பாளர் கொமடோர் இந்திக எதிரிசிங்க, கடற்படை மேசைப்பந்து சங்கத்தின் தலைவர் மருத்துவ கொமாண்டர் எச்யுஎஸ் சில்வா உள்ளிட்ட கடற்படை வீரர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Accessibility Tools