Sri Lanka Navy – Official Logo
SPORT NEWS 2026

கடற்படை கட்டளைகளுக்கு இடையிலான குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - 2026 கடற்படைத் தளத்தில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது

15 Jun 2026

‘அனைத்து கட்டளைகளுக்கு இடையிலான குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - 2026’, 2026 ஜூன் 10 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை கடற்படைத் தளத்தின் குத்துச்சண்டை விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான சாம்பியன் பட்டத்தை வடக்கு கடற்படை கட்டளையும், பெண்களுக்கான சாம்பியன் பட்டத்தை பயிற்சிக் கட்டளையும் வென்றுகொண்டன.

இதன்படி, கடற்படை கட்டளைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி பல வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்ற இந்தச் சுற்றுப்போட்டியில், வடக்கு கட்டளையானது ஐந்து (05) தங்கப் பதக்கங்களையும் ஒரு (01) வெள்ளிப் பதக்கத்தையும் வென்று ஆண்களுக்கான சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியதுடன், மூன்று (03) தங்கப் பதக்கங்கள், இரண்டு (02) வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் இரண்டு (02) வெண்கலப் பதக்கங்களை வென்ற பயிற்சிக் கட்டளையானது பெண்களுக்கான சாம்பியன் பட்டத்தை வென்றுகொண்டது.

ஆண்களுக்கான 75 - 80 கிலோகிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட வடக்கு கடற்படை கட்டளையைச் சேர்ந்த லெப்டினன்ட் பிஏ சமரசிங்க சுற்றுப்போட்டியின் சிறந்த வீரருக்கான விருதினையும், பெண்களுக்கான 54 - 57 கிலோகிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட பயிற்சிக் கட்டளையைச் சேர்ந்த சாதாரண கடற்படை வீராங்கனை பிஏகேஎன் குமாரி சிறந்த வீராங்கனைக்கான விருதினையும் இதன்போது சுவீகரித்துக் கொண்டனர்.

அத்துடன், அனைத்து கட்டளைகளுக்கு இடையிலான குத்துச்சண்டை சுற்றுப்போட்டியின் பரிசளிப்பு நிகழ்வு, கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் கோசல வர்ணகுலசூரிய அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கடற்படை குத்துச்சண்டை அணியின் தலைவர் கொமடோர் லங்கா பெரேரா மற்றும் கடற்படை கட்டளைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் கலந்துகொண்டனர்.

Accessibility Tools