“Between Battlefield and Boardroom: Prevalent Cases from Military and Management Contexts” நூல் கடற்படைத் தளபதியிடம் வழங்கி வைப்பு
இலங்கை கடற்படையின் ரியர் அட்மிரல் ரோஹித அபேசிங்க (ஓய்வு) மற்றும் கலாநிதி அனுராதா இத்தகொட ஆகியோரால் எழுதப்பட்ட “Between Battlefield and Boardroom: Prevalent Cases from Military and Management Contexts” எனும் நூல், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவிடம் கையளிக்கும் நிகழ்வு, 2026 செப்டம்பர் 26 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.
இந்த நூல், வணிகம் மற்றும் இராணுவம் ஆகிய இரு துறைகளிலும் காணப்படும் பிரதான நிறுவன மற்றும் மேலாண்மைப் பிரச்சினைகளை ஆராயும், காலத்திற்கு ஏற்ற 15 சம்பவ ஆய்வுகளைக் கொண்டுள்ளதோடு, இதன் மூலம் அர்ப்பணிப்பு, நெறிமுறைகள் தலைமைத்துவம், ஊழியர்களின் மற்றும் நிலைபேறுதன்மை ஆகிய அம்சங்கள் குறித்த பகுப்பாய்வுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்நிகழ்வில் கலாநிதி திருமதி அனுராதா இத்தகொட அவர்களும் கலந்துகொண்டார்.