Sri Lanka Navy – Official Logo
EVENT NEWS › 2026

திருக்கோவிலில் கடற்படையால் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டது

19 Jun 2026

கடற்படையின் சமூக சேவைத் திட்டத்தின் கீழ், அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள திருக்கோவில் காவல் நிலையத்திற்குள் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் 2026 ஜூன் 15 ஆம் திகதி மக்களிடம் கையளிக்கப்பட்டது.

கடற்படையின் தொழில்நுட்ப ஆதரவுடனும், கெபிட்டல் மெட்டல்ஸ் லிமிடெட்டின் நிதி ஆதரவுடனும் கட்டப்பட்ட இந்த (01) நீர் சுத்திகரிப்பு நிலையம் உட்பட, கடற்படை இதுவரை ஆயிரத்து நூற்று ஐம்பத்தேழு (1157) நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவியுள்ளது.

அதன்படி, பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டுள்ள இந்த நீர் சுத்திகரிப்பு நிலையம், திருக்கோவில் காவல் நிலையத்தில் பணியில் உள்ள காவலர்கள் உட்பட, அப்பகுதியில் வசிக்கும் ஏராளமான மக்களின் சுத்தமான குடிநீர் தேவைகளை எளிதாகப் பூர்த்தி செய்யும்.

Accessibility Tools