Sri Lanka Navy – Official Logo
EVENT NEWS 2026

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலய வருடாந்தப் பெருவிழாவிற்கு கடற்படையினரின் பங்களிப்பு

15 Jun 2026

கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்தப் பெருவிழா, 2026 ஜூன் 13 ஆம் திகதி கொழும்பு பேராயர் அதிமேதகு மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை அவர்களின் தலைமையில், பெருந்திரளான கிறிஸ்தவ பக்தர்களின் பங்கேற்புடன் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. புனித அந்தோனியார் சொரூப பவனி இம்முறையும் இலங்கை கடற்படையினரின் பங்களிப்புடன் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.

இதற்கிணங்க, கடற்படை கத்தோலிக்க சங்கத்தின் ஒருங்கிணைப்பின் கீழ், கடற்படையினர் குறித்த தேவாலயத் திருவிழாவிற்குத் தேவையான பங்களிப்புகளை வழங்கினர். வருடாந்த தேவாலய வழிபாட்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைக்கும் முகமாக நடைபெற்ற மாலை நேர வழிபாட்டு நிகழ்விலும், புனித அந்தோனியார் சொரூப பவனியிலும் மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட கடற்படையினர் பலர் கலந்துகொண்டனர்.

Accessibility Tools