அரசாங்க சேவை திறந்த வலப்பந்தாட்டப் போட்டித் தொடரின் சாம்பியன் பட்டத்தை இலங்கை கடற்படை கைப்பற்றியது
2026 அரசாங்க சேவை திறந்த வலைப்பந்தாட்டப் போட்டித் தொடர், 2026 செப்டம்பர் மாதம் 17 மற்றும் 18 ஆகிய இரு தினங்களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உள்ளக விளையாட்டு அரங்கில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன், அதில் இலங்கை கடற்படை வலைப்பந்தாட்ட அணி சிறந்த திறமைகளை வெளிப்படுத்தி திறந்த வலைப்பந்தாட்டச் சாம்பியன் பட்டத்தைச் வென்றெடுக்க முடிந்தது.
அரசாங்க சேவை வலைப்பந்தாட்டச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போட்டித் தொடரில், முப்படைகள் மற்றும் தீவின் பிரபல வலப்பந்தாட்ட விளையாட்டுப் கழகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி 50 இற்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. அதில், கடற்படை வலைப்பந்தாட்ட அணி மற்றும் விமானப்படை வலைப்பந்தாட்ட அணி மோதிய 'ஏ' பிரிவின் இறுதிப் போட்டியில், விறுவிறுப்பான ஆட்டத்தின் பின்னர் 57-54 என்ற புள்ளிகள் அடிப்படையில் இலங்கை கடற்படை வலைப்பந்தாட்ட அணி வெற்றியீட்டி, ஒட்டுமொத்தப் போட்டித் தொடரின் சாம்பியன் பட்டத்தை ஸ்ரீலங்கா கடற்படைக்கு பெற்றுக்கொடுக்க முடிந்தது.
மேலும், போட்டித் தொடரில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் மற்றும் கேடயங்களை வழங்கும் நிகழ்வில், யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் திரு. எம். பிரதீபன், இலங்கை வலப்பந்தாட்டச் சங்கத்தின் செயலாளர் திருமதி. தேஷிகா விதாரண, இலங்கை கடற்படை வலைப்பந்தாட்டக் குழுவின் தலைவர் கொமாண்டர் எச்.ஏ. ரத்னகீர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.