சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளைப் பிடித்து கொண்டு சென்ற சந்தேகநபர் கிளிநொச்சி வலைப்பாடு பகுதியில் சட்டத்தின் பிடியில்
இலங்கை கடற்படையினரால், கிளிநொச்சி வலைப்பாடு களப்புப் பகுதியில் 2026 ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட சுமார் ஆயிரத்து ஐந்நூறு (1,500) கடல் அட்டைகளுடன் சந்தேகநபர் ஒருவரும் (01), சிறிய படகொன்றும் (01) கைப்பற்றப்பட்டன.
அதன்படி, வடமத்திய கடற்படை கட்டளையின் கீழ் உள்ள இலங்கை கடற்படைக் கப்பலான புவநெக நிறுவனத்தினால், வலைப்பாடு களப்புப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான சிறிய படகொன்று (01) சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது, சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்டு கரைக்கு கொண்டு செல்லப்பட்டுக்கொண்டிருந்த கடல் அட்டைகளின் தொகையுடன், கிராஞ்சி பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவரும் (01), குறித்த சிறிய படகும் இவ்வாறு கைப்பற்றப்பட்டன.
மேலும், இந்த நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட 35 வயதுடைய சந்தேகநபர், கடல் அட்டைகளின் தொகை மற்றும் சிறிய படகு ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.













