வடமேல் கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் மாலன் பெரேரா கடமைகளைப் பொறுப்பேற்றார்
வடமேல் கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் மாலன் பெரேரா, இன்று (2026 ஒக்டோபர் 30) வடமேல் கடற்படை கட்டளைத் தலைமையகத்தில், குறித்த கட்டளையின் தளபதியாக தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
கடற்படை மரபுகளுக்கமைய, புதிய தளபதி வடமேல் கடற்படை கட்டளைத் தலைமையகத்திற்கு வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த கட்டளையின் தளபதியாகப் பணியாற்றிய ரியர் அட்மிரல் வருண பெர்னாண்டஸ், கட்டளைத் தலைமையகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக புதிய தளபதியிடம் தனது கடமைகளை ஒப்படைத்தார்.
மேலும், 23 ஆவது ஆட்சேர்ப்பின் கெடட் அதிகாரியாக இணைந்து, 1996 ஜூன் மாதம் 20 ஆம் திகதி அதிகாரியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் மாலன் பெரேரா, வடமேல் கடற்படை கட்டளையின் தளபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்னர், விநியோக முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளராகக் கடமையாற்றினார்.













