Sri Lanka Navy – Official Logo

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் மூலம் 39 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்

17 Jun 2026

இலங்கை கடற்படையினர், 2026 01 முதல் 15 ஜூன் வரை உள்ளூர் கடற்பரப்பில் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட முப்பத்தொன்பது (39) நபர்களையும், பன்னிரண்டு (12) டிங்கிகள், ஒரு (01) கெனோக்கள் மற்றும் இரண்டு (02) டிராக்டர்களையும் கடற்படையினர் கைது செய்தனர்.

இதன்படி, கிருயோணமலை கிண்ணியா, துடுவ, சாகரபுரம், வைட் டோப் ரோக், கொக்கட்டியாறு, தக்வா நகர், முல்லைத்தீவு நந்திக்கடல், மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் கட்டைக்காடுஅம்பாறை காரைத்தீவு கரையோர மற்றும் கடற்பரப்புகளை உள்ளடக்கிய இந்த நடவடிக்கைகளின் மூலம் முப்பத்தொன்பது (39) நபர்கள் கிழக்கு, வடக்கு மற்றும் தென்கிழக்கு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், வணிக வெடிபொருட்கள், தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள், டிராக்டர்கள், மற்றும் மீன்பிடிப் படகுகள் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக திருகோணமலை, குச்சவெளி, மூதூர், முல்லைத்தீவு, கொட்பே, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் காரைத்தீவு ஆகிய இடங்களில் உள்ள மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்களஞ்சிய அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட்டன.

Accessibility Tools