இலங்கைக்கான பெங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியைச் சந்தித்தார்
இலங்கையிலுள்ள பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றும் கொமடோர் M Moniruzzaman உத்தியோகபூர்வ சந்திப்புக்காக இன்று (2026 செப்டம்பர் 10) கடற்படை தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவைச் சந்தித்தார்.
இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் போது, இலங்கைக் கடற்படையின் 27ஆவது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ பதவியேற்றமைக்கு இலங்கையிலுள்ள பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கொமடோர் M Moniruzzaman தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையே இணக்கமான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
மேலும், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் கடற்படைத் தளபதிக்கும் கொமடோர் M Moniruzzaman இற்கும் இடையே நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.