கடற்படை பொது வைத்தியசாலை சிகிச்சைக்காக மீண்டும் திறக்கப்பட்டது
கொவிட் - 19 வைரஸால் பாதிக்கப்பட்ட கடற்படையினர்களுக்கான சிகிச்சை மையமாக கொழும்பு கடற்படை பொது வைத்தியசாலை மாற்றப்பட்டுள்ளதுடன் சாதாரண நோயாளிக்கான சிகிச்சைகள் குறைக்கப்பட்டது.
01 Jul 2020
இலங்கையின் முதல் நீருக்கடியில் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது
இலங்கையின் முதல் நீருக்கடியில் அருங்காட்சியகம் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா 2020 ஏப்ரல் 5 ஆம் திகதி காலியின் கடல் கரையில் திறக்கப்பட்டது.
17 Jun 2020
‘சத் சித் சத் கம் பியச’ புதிய வார்டு வளாகம் கடற்படைத் தளபதியால் திறந்து வைக்கப்பட்டது
கடற்படையின் ஆதரவின் கீழ் கராப்பிட்டி வைத்தியசாலையில் புதிதாக கட்டப்பட்ட ‘சத் சித் சத் கம் பியச’ புதிய வார்டு வளாகம் இன்று (2020 ஜூன் 13) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவினால் திறந்து வைக்கப்பட்டன.
13 Jun 2020
104 கிலோ கிராமுக்கு மேற்பட்ட கேரள கஞ்சா மூட்டைகள் கடற்படையினரால் பறிமுதல்
யாழ்ப்பாணம், குசுமந்துரை கடற்கரையில் 2020 ஜூன் 12 ஆம் திகதி மேற்கொன்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோத முறையில் கடல் வழியாக கரைக்கு கொண்டுவர முயற்சித்த பல கேரள கஞ்சா மூட்டைகள் கடற்படை கைப்பற்றியது.
12 Jun 2020
கடற்படையின் பங்களிப்புடன் அங்கொடை தேசிய தொற்று நோய்கள் நிறுவனத்தில் கணினிமயமாக்கப்பட்ட ஸ்கேனிங் கதிர்வீச்சு பிரிவுக்கான புதிய கட்டிடம் கடற்படையின் பங்களிப்புடன் கட்டப்பட்டது.
அங்கொடை தேசிய தொற்று நோய்கள் நிறுவனத்தில் கணினிமயமாக்கப்பட்ட ஸ்கேனிங் கதிர்வீச்சு பிரிவுக்காக (CT Scanner Unit) கடற்படையின் பங்களிப்புடன் கட்டபட்ட இரண்டு மாடி கட்டிடம் 2020 ஜூன் 04 அன்று அதிகாரப்பூர்வமாக குறித்த நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
05 Jun 2020
பாதிக்கப்பட்ட மீன்பிடிக் படகுகளுக்கு தேவையான எரிபொருளை சமுதுர கப்பல் மூலம் மேலும் வழங்கப்படுகிறது
‘அம்ப்பன்’ சூறாவளியின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இந்தோனேசியா கடற்பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்ட மீன்பிடி படகுகள் இப்போது இலங்கை கடற்படை கப்பல் சமுதுரவின் ஆதரவுடன் மீண்டும் இலங்கையை நோக்கி வருகின்றன. இவ்வாரு வருகின்ற குறித்த மீன்பிடிக் படகுகளுக்கு தேவையான உணவு, நீர், மருத்துவ பொருட்கள் மற்றும் எரிபொருளை சமுதுர கப்பல் மூலம் மேலும் வழங்கப்படுகின்றன.
25 May 2020
சமுதுர கப்பல்‘அம்ப்பன்’ சூறாவளியின் தாக்கத்தால் கடலில் சிக்கித் தவிக்கும் மீன்பிடிப் படகுகளை நெருங்கியது.
‘அம்ப்பன்’ சூறாவளியின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இந்தோனேசியா கடற்பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்ட பல மீன்பிடி படகுகளுக்கு தேவையான ஆதரவையும் எரிபொருளையும் வழங்க 2020 மே 21 ஆம் திகதி புறப்பட்டு சென்ற இலங்கை கடற்படையின் சமுதுர கப்பல் இப்போது குறித்த மீன்பிடி படகுகளை அடைந்துவிட்டு, அவர்களுடன் தகவல்தொடர்புகளை உருவாக்கியுள்ளது.
22 May 2020
‘அம்ப்பன்’ சூறாவளியின் தாக்கத்தால் கடலில் சிக்கித் தவிக்கும் மீன்பிடிப் படகுகளுக்கு உதவி வழங்க கடற்படைக் கப்பலொன்று புறப்பட்டுள்ளது
கடந்த சில நாட்களாக, வங்காள விரிகுடாவைச் சுற்றியுள்ள கடல் பகுதி மையமாக் கொண்டு நகர்ந்த ‘அம்ப்பன்’ சூறாவளியின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இந்தோனேசியா கடற்பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்ட பல மீன்பிடி படகுகளுக்கு தேவையான ஆதரவையும் எரிபொருளையும் வழங்க இலங்கை கடற்படையின் உயர் தொழில்நுட்ப ஆழ்கடல் கண்காணிப்பு கப்பலொன்று குறித்த பகுதிக்கு அனுப்ப கடற்படை இன்று (2020 மே 21) நடவடிக்கை எடுத்துள்ளது.
21 May 2020
கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 12 கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்- குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 221 ஆக அதிகரிப்பு
கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த 12 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களுடைய உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் 2020 மே 19 ஆம் திகதி அவர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.
20 May 2020
கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 05 கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்- குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 209 ஆக அதிகரிப்பு
கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 05 கடற்படை வீரர்கள் 2020 மே 18 ஆம் திகதி நடத்திய பி.சி.ஆர் பரிசோதனையின் பின் குறித்த வைரஸ் உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.
19 May 2020