கடற்படை தாதி கல்லூரியில் தாதி பாடநெறியை முடித்த 41 பேர் தாதி உறுதிமொழியை வழங்கினர்

சர் ஜான் கோத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட வெலிசர இலங்கை கடற்படை கப்பல் தக்‌ஷிலா நிறுவனத்தில் நிருவப்பட்ட கடற்படை தாதி கல்லூரியில் 2022 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பின் 41 கடற்படை மற்றும் விமானப்படை தாதிகளின் தொப்பி அணிவிப்பு மற்றும் தாதியர் உறுதிமொழி வழங்கும் விழா இன்று (2023 மே 15) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் தலைமையில் இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிறுவனத்தின் அட்மிரல் சோமதிலக திசாநாயக்க கேட்போர் கூடத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் இணை சுகாதார கல்லூரியின் பீடாதிபதி திரு. எஸ்.எஸ்.பீ வர்ணகுலசூரிய அவர்கள் கலந்து கொண்டார்.

15 May 2023

ஹுனுபிட்டிய கங்காராம விகாரையின் புத்த ரஷ்மி வெசாக் வலயத்தின் பெரஹெர கடற்படையினரின் பங்களிப்புடன் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.

2567 வது ஸ்ரீ சம்புத்த ஜயந்தியை முன்னிட்டு, ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரயை மையமாக கொண்டு நடைபெறுகின்ற புத்த ரஷ்மி வெசாக் வலயத்தின் 2023 மே மாதம் 06 ஆம் திகதி இரவு பெரஹெர ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையில் அனுநாயக்க வணக்கத்திற்குரிய கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி தேரரின் அறிவுரைப்படி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் கட்டளைப்படி கடற்படை பௌத்த சங்கத்தின் அனுசரணையில் வண்ணமயமாக நடத்த இலங்கை கடற்படை ஏற்பாடு செய்திருந்தது.

07 May 2023