யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் 54 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், மாதகல் கரையோரப் பகுதியில் மற்றும் குறித்த கரையோரப் பகுதிக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் 2023 மார்ச் 28 ஆம் திகதி இரவு மேற்கொண்டுள்ள சிறப்பு நடவடிக்கைகளின் போது 165 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சாவைக் இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர்.
29 Mar 2023
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 02 இந்திய மின்பிடி படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகுகளை விரட்டுவதற்காக இன்று (2023 மார்ச் 23) காலை வடக்கு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு இந்திய மீன்பிடி படகுகளுடன் 12 இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணம், அனலைதீவு மற்றும் கோவிலன் பகுதிகளுக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
23 Mar 2023
பாதுகாப்பு அமைச்சின் ஊடக பணிப்பாளரால் எழுதப்பட்ட ‘Story of the World: Geopolitical Alliances and Rivalries Set in Stone’என்ற புத்தகத்தின் பிரதியொன்று கடற்படைத் தளபதிக்கு வழங்கப்பட்டது
பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கேர்ணல் நலீன் ஹேரத் எழுதிய ‘Story of the World: Geopolitical Alliances and Rivalries Set in Stone’ என்ற நூலின் பிரதியொன்று கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவிடம் கடற்படைத் தலைமையகத்தில் இன்று (21 மார்ச் 2023) வழங்கப்பட்டது.
22 Mar 2023
இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் கௌரவ திருமதி Rita Giuliana MANNELLA அவர்கள் இன்று (2023 மார்ச் 16) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.
17 Mar 2023
சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் கடற்படை சேவா வனிதா பிரிவின் பங்களிப்புடன் சிறப்பு மகளிர் தின நிகழ்ச்சியொன்று நடத்தப்பட்டது
2023 மார்ச் 08 ஆம் திகதி ஈடுபட்டுள்ள சர்வதேச மகளிர் தினத்துடன் இணைந்து கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவின் கெளரவத் தலைவி திருமதி மாலா லமாஹேவா ஆகியோர் தலைமையில் இன்று (2023 மார்ச் 11) வெலிசறை கடற்படை வளாகத்தில் விசேட மகளிர் தின நிகழ்ச்சியொன்று நடத்த இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
12 Mar 2023
கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த பெருவிழா கடற்படையினரின் உதவியுடன் வெற்றிகரமாக நடத்தப்பட்டது
இந்திய-இலங்கை கடல் எல்லைக்கு அருகில் உள்ள கச்சத்தீவில் அமைந்துள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்த பெருவிழா கொழும்பு உதவி ஆயர் அருட்தந்தை அன்டன் ரஞ்சித் பிள்ளைநாயகம் அவர்களின் தலைமையில் யாழ்.மாவட்ட செயலாளர் ஏ. சிவபாலசுந்தரம் அவர்கள் மற்றும் கடற்படை கிறிஸ்தவ சங்கத்தின் அமைப்பாளர்களின் பங்களிப்பின் பெருந்திரளான இலங்கை மற்றும் இந்திய பக்தர்களின் பங்கேற்புடன், 2023 மார்ச் 03 மற்றும் இன்று (2023 மார்ச் 04) வெகு விமரிசையாக நடைபெற்றதுடன் இறுதி பூஜை நிகழ்விற்காக, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா அவர்களின் பிரதிநிதியாக வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் அருண தென்னகோன் அவர்கள் கலந்துகொண்டார்.
05 Mar 2023