இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 72வது ஆண்டு நிறைவு விழாவின் ஆரம்பம் ஜய ஸ்ரீ மஹா போதி மற்றும் ருவன்வெலி மஹா சேய மையமாக நடைபெற்றது

2022 டிசம்பர் மாதம் 09 ஆம் திகதி ஈடுபட்டுள்ள இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 72 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கஞ்சுக பூஜை மற்றும் கடற்படை கொடிகள் ஆசிர்வாதிக்கும் பூஜை இம்முறையும் கடற்படை பௌத்த சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த நிகழ்வு 2022 நவம்பர் 09 ஆம் திகதி மற்றும் இன்று (2021 நவம்பர் 10) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலைமையில் ருவன்வேலி மஹா சேய மற்றும் ஜெய ஸ்ரீ மகா போதி ஆகிய இடங்களில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கடற்படை சேவா வனிதா பிரிவின் தளபதி திருமதி சந்திமா உலுகேதென்னவும் கலந்து கொண்டார்.

11 Nov 2022

6,622 மற்றும் 13,244 மில்லியன் ரூபாய்களுக்கு இடையில் பெறுமதியான 331 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற இலங்கையில் பல நாள் மீன்பிடிக் கப்பலொன்று தென்கடலில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படை, பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் இணைந்து அம்பாந்தோட்டை மகா ராவணா கலங்கரை விளக்கத்திற்கு அப்பால் தென் கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது 6,622 மற்றும் 13,244 மில்லியன் ரூபாய்களுக்கு இடையில் வீதி பெறுமதியான 331 கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் பல நாள் மீன்பிடிக் கப்பலொன்று மற்றும் ஆறு (06) சந்தேக நபர்கள் 2022 நவம்பர் 05 ஆம் திகதி கைது செய்யப்பட்டன. கைப்பற்றப்பட்டுள்ள போதைப்பொருள் மற்றும் சந்தேகநபர்கள் இன்று (2022 நவம்பர் 7,) காலை காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், இதேவேளை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன போதைப்பொருட்களை பார்வையிடுவதற்காக காலி துறைமுகத்திற்கு வருகை தந்தார்.

07 Nov 2022

இலங்கை கடற்படை கப்பல் படையணியுடன் இணைந்த P 627 ஆழ்கடல் கண்கானிப்பு கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

அமெரிக்காவின் சியாட்டில் துறைமுகத்தில் இருந்து 2022 செப்டம்பர் 03 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு தனது பயணத்தை தொடங்கிய அமெரிக்க கடலோர காவல்படை திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்ட P627 ஆழ்கடல் கண்கானிப்பு கப்பல் பசிபிக் பெருங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலில் சுமார் 10656 கடல் மைல்கள் (சுமார் 19734 கி.மீ) நீண்ட பயணத்திற்குப் பிறகு இன்று (2022 நவம்பர் 02) காலை கொழும்பு துறைமுகத்தை அடைந்தது. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் அழைப்பின் பேரில் குறித்த கப்பலை வரவேற்கும் நிகழ்வுக்காக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. பிரமித பண்டார தென்னகோன், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் கௌரவ ஜூலி சங், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு), பாதுகாப்பு படைகளின் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விகும் லியனகே, இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன உட்பட கௌரவ அதிதிகள் கலந்து கொண்டனர்.

02 Nov 2022