கடற்படை தளபதி பதில் பாதுகாப்பு அமைச்சருடன் சந்திப்பு
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, 2022 செப்டெம்பர் 28 ஆம் திகதி, பதில் பாதுகாப்பு அமைச்சரும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான கௌரவ பிரமித பண்டார தென்னகோனை அரச பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் சந்தித்தார்.
29 Sep 2022
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மின்பிடி படகொன்று வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகுகளை விரட்டுவதற்காக 2022 செப்டம்பர் 19 ஆம் திகதி இரவு வடக்கு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 08 இந்திய மீனவர்களுடன் ஒரு இந்திய மீன்பிடி படகு கரைநகர் கோவிலன் கலங்கரை விளக்கத்திற்கு அப்பால் கடலில் கைது செய்யப்பட்டன.
21 Sep 2022
பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபேத் மகாராணியின் மறைவுக்கு இலங்கை கடற்படையின் அஞ்சலி
பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபேத் மகாராணியின் 70 ஆண்டுகால ஆட்சிக் காலத்தின் போது இலங்கை கடற்படையின் படிப்படியான வளர்ச்சிக்காக பிரித்தானிய அரச கடற்படையால் வழங்கப்பட்ட நீண்டகால ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்பின் வரலாற்றை நினைவுகூறும் நிலையில், 2022 செப்டெம்பர் 08 ஆம் திகதி காலமான இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு இலங்கை கடற்படை தனது உயரிய அஞ்சலியை செலுத்துகிறது.
18 Sep 2022
இலங்கை கடற்படையில் புதிதாக இணைந்த P 627 ஆழ்கடல் கண்கானிப்பு கப்பல் அமெரிக்காவின் சியாட்டிலில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்டுள்ளது.
அமெரிக்கா கடலோரக் காவல்படையினரால் இலங்கை கடற்படையிடம் 2021 ஒக்டோபர் மாதம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்ட P627 ஆழ்கடல் கண்கானிப்பு கப்பல், இலங்கை கடற்படையின் செயற்பாட்டுத் தேவைக்கேற்ப நவீனப்படுத்தப்பட்டு அமெரிக்காவின் சியாட்டில் துறைமுகத்தில் இருந்து அதன் புதிய இல்லமான கொழும்பு துறைமுகத்தை நோக்கி 2022 செப்டம்பர் 03 ஆம் திகதி பயணம் தொடங்கியது.
05 Sep 2022
இலங்கையின் புதிய மாலைதீவுக் குடியரசு பாதுகாப்பு ஆலோசகருக்கு கடற்படைத் தளபதியின் வாழ்த்துக்கள்
இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகராலயத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்படவுள்ள லெப்டினன்ட் கேர்ணல் ஹசன் அமிர் (Lieutenant Colonel Hassan Amir) மற்றும் தற்போது அந்த பதவியில் கடமையாற்றும் கர்னல் இஸ்மயில் நசீர் (Colonel Ismail Naseer) மற்றும் கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன ஆகியோருக்கிடையில் உத்தியோகபூர்வ சந்திப்பொன்று இன்று (02 செப்டம்பர் 2022) கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்றது, அங்கு கடற்படைத் தளபதி லெப்டினன்ட் கேர்ணல் ஹசன் அமீர்வை அன்புடன் வரவேற்றார்.
04 Sep 2022