ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் கடற்படையினரால் அபிவிருத்தி செய்யப்பட்ட இரண்டு பாடசாலைகள் மாணவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஹுங்கம, எத்படுவ கனிஷ்ட வித்தியாலயத்தில் மற்றும் சூரியவெவ, வீரியகம மகா வித்தியாலயத்தில் கடற்படையினரால் அபிவிருத்தி செய்யப்பட்ட வசதிகள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலைமையில் மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி சந்திமா உலுகேதென்னவின் பங்கேப்பில் இன்று (2021 நவம்பர் 29) மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.
30 Nov 2021
71வது கடற்படை தினத்தை முன்னிட்டு கடற்படையினருக்கு ஆசீர்வாதமாக கொட்டாஞ்சேனை புனித லுசியா தேவாலயத்தில் தேவ வழிபாடுகள்
2021 டிசம்பர் 09 ஆம் திகதி நடைபெற உள்ள இலங்கை கடற்படையின் 71 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்படுகின்ற சமய நிகழ்ச்சிகள் தொடரில் கிறிஸ்தவ சமய வழிபாடுகள் 2021 நவம்பர் 23 அன்று கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதன்னவின் தலைமையில் கொழும்பு உதவி ஆயர், வண. கலாநிதி அன்டன் ரஞ்சித் தேரர் மற்றும் ஏனைய குருமார்களின் பங்களிப்புடன் கொழும்பு புனித லுசியா தேவாலயத்தில் இடம்பெற்றது.
24 Nov 2021
சந்தஹிருசேய தூபி மகா சங்கத்தினரிடம் ஒப்படைப்பு
அநுராதபுரம் புனித நகரத்தில் நிர்மாணிக்கப்பட்ட சந்தஹிரு சேய தூபி மகா சங்கத்தினரிடம் ஒப்படைக்கும் நிகழ்வு அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் 2021 நவம்பர் 18 ஆம் திகதி மகா சங்கத்தினரின் ஆசிர்வாதங்களுக்கு மத்தியில் நடைபெற்றதுடன் இந்த நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.
19 Nov 2021
கடற்படையின் 71 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அனுராதபுரத்தில் கொடி ஆசீர்வாதம் பூஜை மற்றும் “கஞ்சுக” பூஜை நடைபெற்றது
2021 டிசம்பர் மாதம் 09 ஆம் திகதிக்கு ஈடுபட்டுள்ள இலங்கை கடற்படையின் 71 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கஞ்சுக பூஜை மற்றும் கடற்படை கொடிகள் ஆசிர்வாதிக்கும் பூஜை இம்முறையும் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த விழா 2021 நவம்பர் 11 மற்றும் இன்று (2021 நவம்பர் 12) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலைமையில் ருவன்வேலி மஹா சேய மற்றும் ஜெய ஸ்ரீ மகா போதி ஆகிய இடங்களில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கடற்படை சேவா வனிதா பிரிவின் தளபதி திருமதி சந்திமா உலுகேதென்னவும் கலந்து கொண்டார்.
14 Nov 2021
இரண்டு புதிய இலங்கை சாதனைகளைப் படைத்த கயந்திகா அபேரத்னவுக்கு கடற்படைத் தளபதியினால் பதவி உயர்வு
மகளிருக்கான 1500 மீற்றர் மற்றும் 5000 மீற்றர் தடகளப் போட்டிகளில் இரண்டு புதிய இலங்கை சாதனைகளைப் படைத்து இலங்கை கடற்படைக்கு பெரும் புகழைக் கொண்டு வந்த கடற்படை வீராங்கனி கயன்திகா அபேரத்னவுக்கு கடற்படைத் தளபதியினால் இன்று (நவம்பர் 21) பதவி உயர்வு வழங்கப்பட்டன.
03 Nov 2021