கொமாண்டர் பராக்ரம சமரவீர நினைவு உள்ளரங்க விளையாட்டு வளாகம் வெலிசர கடற்படை வளாகத்தில் திறக்கப்பட்டது
புதிதாக கட்டப்பட்ட இலங்கை கடற்படை உள்ளரங்க விளையாட்டு வளாகம் கொமாண்டர் பராக்ரம சமரவீர நினைவு உள்ளரங்க விளையாட்டு வளாகம் என்று பெயரிடப்பட்டு இன்று (2021 ஜூன் 23) கடற்படைத் தளபதி மற்றும் கடற்படை விளையாட்டு வாரியத்தின் தளபதியுமான வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலமையில் மற்றும் கொமாண்டர் (இறந்த) பராக்ரம சமரவீர கடற்படை அதிகாரியின் அன்புள்ள மனைவி திருமதி சுதர்ஷனி சமரவீரவின் பங்கேற்புடன் வெலிசர கடற்படை வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது.
23 Jun 2021
ரூ .1758 மில்லியனுக்கும் மேல் பெறுமதியான சுமார் 219 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கடற்படையினரால் பறிமுதல்
கடற்படையினரால் வெலிகம, பொல்வதுமோதர கடற்கரை பகுதியில் 2021 ஜூன் 12 ஆம் திகதி இரவு மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது கடல் வழியாக நாட்டிற்குள் கடத்த முயன்ற சுமார் 219 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 09 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
13 Jun 2021
இந்திய கடலோர காவல்படையின் ‘சமுத்ர பிரஹாரி’, 'வஜ்ரா' மற்றும் 'வெபாவு' ஆகிய கப்பல்களின் பங்களிப்பை கடற்படைத் தளபதியின் பாராட்டுக்கு
2021 மே மாதம் 20 ஆம் திகதி கொழும்பு துறைமுக கடல் பகுதியில் தீ விபத்துக்குள்ளான MV X-PRESS PEARL என்ற கப்பலில் பேரழிவு நிலைமையை நிர்வகிக்க மற்ற பங்குதாரர்களுடன் இணைந்து செய்த சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இன்று (ஜூன் 10, 2021)கொழும்பு துறைமுகத்தில் வைத்து இந்திய கடலோர காவல்படையின் ‘சமுத்ர பிரஹாரி’(ICGS Samudra Prahari ), 'வஜ்ரா' (ICGS Vajra) மற்றும் 'வெபாவு' (ICGS Vaibhav) ஆகிய கப்பல்களின் கட்டளை அதிகாரிகளுக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன பாராட்டு கடிதங்களை வழங்கினார்.
10 Jun 2021
முப்பத்திரண்டு (32) கடற்படை நிவாரணக் குழுக்கள் வெள்ள நிவாரணப் பணிகளில்
கடும் மழை காரணமாக மேற்கு, தெற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள ஆபாயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக கொழும்பு, கம்பஹ, களுத்துறை, காலி மற்றும் இரத்னபுரி மாவட்டங்களை உள்ளடக்கி 32 நிவாரண குழுக்களை கடற்படை நிறுத்தியுள்ளது. இந்த நிவாரண குழுக்கள் இன்றைய தினமும் தொடர்ந்து (2021 ஜூன் 07) வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கி வருகிறது.
07 Jun 2021