THE FIRST LINE OF DEFENCE
சந்தஹிரு சேய தூபியின் நாற்சதுரத்தினுள் புதையல் பொருட்கள் மற்றும் புனித நினைவுச் சின்னங்களை வைப்புச் செய்யும் மகோட்ஷவம் இன்று (2021 மார்ச் 28) பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) அவர்களின் தலைமையில் அனுராதபுரம் புனித நகரத்தில் தூபி அமையப்பெற்றுள்ள வளாகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்ன கலந்து கொண்டனர்.
28 Mar 2021
Read more >
இலங்கை நிரந்தர மற்றும் தன்னார்வ கடற்படையின் 241 ஆம் ஆட்சேர்ப்பின் 377 வீரர்கள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து 2021 மார்ச் 27 ஆம் திகதி பூனாவை கடற்படை கப்பல் சிக்ஷா நிருவனத்தில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர்.
கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்னவின் கருத்தின் படி 2021 மார்ச் 21 ஆம் திகதி ஈடுபட்ட உலக வன தினத்தை முன்னிட்டு கடற்படை சேவா வனிதா பிரிவு அனைத்து கடற்படை கட்டளைகளையும் உள்ளடக்கி மரம் நடும் திட்டமொன்றை ஏற்பாடு செய்தது. அதன் படி மேற்கு கடற்படை கட்டளையில் நடைபெற்ற நிகழ்வு சேவா வனிதா பிரிவின் தலைவியின் அழைப்பின் பேரில், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்வின் தலைமையில் 2021 மார்ச் 21 அன்று வெலிசர இலங்கை கடற்படை கப்பல் கெமுனு நிறுவனத்தில் நடைபெற்றது.
22 Mar 2021
இலங்கை கடற்படை விளையாட்டு வாரியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கடற்படை வண்ண விருதுகள் – 2021 நிகழ்வு இன்று (2021 மார்ச் 09) கடற்படைத் தளபதி மற்றும் கடற்படை விளையாட்டு வாரியத்தின் தலைவர் வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலமையில் அத்திடிய ஈகள்ஸ் லேக்ஸைட் விழா மண்டபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
09 Mar 2021
பாதுகாப்பு செயலாளர் (ஓய்வு) கமல் குணரத்ன அவர்கள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவுடன் 2021 மார்ச் 06 அன்று அனுராதபுரம் சந்தஹிரு சேயவின் நிர்மாணப்பணிகளை ஆய்வு செய்து, மிஹிந்தலை மிஹிந்து மகா சேயவின் மறுசீரமைப்பு பணிகளை தொடங்கும் நிகழ்வுக்காக கழந்து கொண்டார்.
08 Mar 2021
இந்திய விமானப்படைத் தளபதி, எயார் சீப் மார்ஷல் ராகேஷ் குமார் சிங் பாதூரியா (Rakesh Kumar Singh Bhadauria) இன்று (2021 மார்ச் 4) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை சந்தித்தார்.
04 Mar 2021
இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகள் கூட்டாக இனைந்து கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான தேசிய பாதுகாப்பு ஆலோசனை பற்றி முத்தரப்பு நிரந்தர செயலகமொன்று பாதுகாப்பு செயலாளர், ஜெனரால் (ஓய்வு) ) கமல் குணரத்ன தலமையில் இன்று (2021 மார்ச் 21) கடற்படை தலைமையகத்தில் நிறுவப்பட்டது.
01 Mar 2021