தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த 118 நபர்கள் தங்களது வீடுகளுக்கு செல்லல்
கடற்படையினரால் நிருவகிக்கப்பட்டு வரும் சாம்பூர் (98) ஒலுவில் (20) தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த 118 நபர்கள் இன்று 2020 மே 08 ஆம் திகதி தங்களுடைய வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.
08 May 2020
வெசாக் தினத்தை (07) முன்னிட்டு கடற்படை முகாம்களில் விசேட பௌத்த மத வழிப்பாட்டு பிரார்த்தனைகள் இடம்பெற்றன
புத்தரின் மகத்தான வாழ்கையை நினைவு கூரும் வெசாக் தினத்தை (07) முன்னிட்டு கடற்படை முகாம்களில் விசேட பௌத்த மத வழிப்பாட்டு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. மேலும் உலகம் முழுவதும் பரவி வரும் கோவிட் -19 வைரஸ் தொற்று வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் கடற்படை வீரர்கள் உட்பட அனைத்து இலங்கையர்கள் மற்றும் முழு உலக மக்களுக்கும் விரைவாக குணமடைய இங்கு மத பிராத்தனைகளும் நல்வாழ்வுக்காக பிரார்த்தனைகளும் நடத்தப்பட்டன.
08 May 2020


