‘அம்ப்பன்’ சூறாவளியின் தாக்கத்தால் கடலில் சிக்கித் தவிக்கும் மீன்பிடிப் படகுகளுக்கு உதவி வழங்க கடற்படைக் கப்பலொன்று புறப்பட்டுள்ளது

கடந்த சில நாட்களாக, வங்காள விரிகுடாவைச் சுற்றியுள்ள கடல் பகுதி மையமாக் கொண்டு நகர்ந்த ‘அம்ப்பன்’ சூறாவளியின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இந்தோனேசியா கடற்பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்ட பல மீன்பிடி படகுகளுக்கு தேவையான ஆதரவையும் எரிபொருளையும் வழங்க இலங்கை கடற்படையின் உயர் தொழில்நுட்ப ஆழ்கடல் கண்காணிப்பு கப்பலொன்று குறித்த பகுதிக்கு அனுப்ப கடற்படை இன்று (2020 மே 21) நடவடிக்கை எடுத்துள்ளது.

21 May 2020

கடற்படை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களுக்கு அருகிலுள்ள அரசு வைத்தியசாலைகளிலிருந்து மாதாந்திர மருந்துகளைப் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

covid 19 தொற்றுநோய் காரணத்தினால், covid 19 வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கான சிகிச்சை மையமாக கொழும்பு கடற்படை பொது வைத்தியசாலை மாற்றப்பட்டுள்ளது. இந்த பின்னணியில், ஓய்வு பெற்ற கடற்படை வீரர்கள், கடற்படை பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் மாதாந்திர மருந்துகளை பெறுவதுக்காக எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு மாதாந்திர மருந்துகளைப் அருகிலுள்ள அரசு வைத்தியசாலைகளிலிருந்து பெற கடற்படை ஒரு புதிய திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது,

12 May 2020