SPORT NEWS › 2026

‘Army Commander’s Cup Golf Tournament - 2026’ இல் கடற்படையினர் வெற்றியைத் தனதாக்கினர்

19 Oct 2026

இலங்கை இராணுவ கோல்ப் அணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘Army Commander’s Cup Golf Tournament – 2026’ போட்டித் தொடர், 2026 ஒக்டோபர் 17 மற்றும் 18 ஆகிய இரு தினங்களில் தியத்தலாவ இராணுவ கோல்ப் மைதானத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. இப்போட்டித் தொடரில் இலங்கை கடற்படையினர் மூன்று வெற்றிகளைப் பெற்றுக்கொண்டனர்.

அதன்படி, இப்போட்டித் தொடரின் Defence Winner Gents பிரிவுக்கான வெற்றிக் கிண்ணத்தை கெப்டன் ஆனந்த திசாநாயக்கவும், இரண்டாம் இடத்திற்கான கிண்ணத்தையும் Longest Drive கிண்ணத்தையும் கொமடோர் மங்கள மும்முல்லகேவும் வென்று கடற்படைக்குப் பெருமை சேர்த்தனர்.

மேலும், இப்போட்டித் தொடரின் பரிசளிப்பு விழாவில் கடற்படை கோல்ப் அணியின் தலைவரான ரியர் அட்மிரல் ரோஹன் ஜோசப், கடற்படை கோல்ப் அணியின் செயலாளரான கொமடோர் எம்ஏடிடிஎம் பியதிலக்க உள்ளிட்ட கடற்படை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Accessibility Tools