Sri Lanka Navy – Official Logo

பத்தலங்குண்டுவ தீவில் திடீர் உடல்நலக் குறைவுக்கு உள்ளான பெண் ஒருவரை மருத்துவ சிகிச்சைக்காக அனுப்புவதற்கு கடற்படையினர் உதவி

02 Oct 2026

கற்பிட்டி, பத்தலங்குண்டுவ தீவில் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக ஆபத்தான நிலையில் இருந்த பெண் ஒருவருக்கு முதற்கட்ட முதலுதவி சிகிச்சை அளித்து, கற்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்புவதற்கு இலங்கை கடற்படையினர் 2026 ஒக்டோபர் 01 ஆம் திகதி இரவு நடவடிக்கை மேற்கொண்டனர்.

அதன்படி, பத்தலங்குண்டுவ தீவில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக தற்காலிகமாக தங்கியிருந்த பெண் ஒருவர் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக ஆபத்தான நிலையில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், குறித்த பெண் இலங்கை கடற்படைக் கப்பல் விஜய நிறுவனத்திற்குச் சொந்தமான P 265 கடலோர ரோந்து படகின் மூலம் விஜய நிறுவனத்தின் இறங்குதுறைக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர், அவருக்கு அவசரமாக சிகிச்சை வழங்குவதற்காக கற்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Accessibility Tools