Sri Lanka Navy – Official Logo

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 570 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகள் கற்பிட்டியில் கைப்பற்றப்பட்டன

07 Oct 2026

இலங்கை கடற்படையினர், கடலோர பாதுகாப்புத் திணைக்களத்துடன் இணைந்து, கற்பிட்டி – இலந்தையடி கடற்கரைப் பகுதியில் இன்று (2026 ஒக்டோபர் 07) காலை மேற்கொண்ட விசேட கூட்டு தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பீடி இலைகள் அடங்கிய ஒரு தொகையை கைப்பற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும் இலங்கை கடற்படைக் கப்பல் விஜய நிறுவனத்தினர், கடலோர பாதுகாப்புத் திணைக்களத்துடன் இணைந்து, கற்பிட்டி – இலந்தையடி கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட இந்த விசேட கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் காணப்பட்ட சந்தேகத்திற்கிடமான பதினைந்து (15) பொதிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயற்சிக்கப்பட்டு, கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 570 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகள் அடங்கிய தொகை கைப்பற்றப்பட்டு, சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், இந்த கூட்டு தேடுதல் நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் அடங்கிய தொகை, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

Accessibility Tools