அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கடற்படைக்குச் சொந்தமான ‘USS TULSA’ போர்க்கப்பல் நாட்டை விட்டுப் புறப்பட்டது
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கடற்படைக்குச் சொந்தமான ‘USS TULSA (LCS 16)’ போர்க்கப்பல், இன்று (2026 ஒக்டோபர் 09) நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றது. குறித்த கப்பலுக்கு இலங்கை கடற்படையினரால் கடற்படை மரபுகளுக்கு அமைவாக பிரியாவிடை வழங்கும் நிகழ்வு கொழும்பு துறைமுகத்தில் நடைபெற்றது.
அதன்படி, 2026 ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி விநியோக மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக நாட்டிற்கு வருகை தந்த ‘USS TULSA (LCS 16)’ போர்க்கப்பல், குறித்த தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்ட பின்னர் இவ்வாறு நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றது.
1 /
6