EVENT NEWS › 2026

15 வது Pre Command Training (PCT) பாடநெறி வெற்றிகரமாக நிறைவுற்றது

27 Oct 2026

இலங்கை கடற்படைக் கப்பல்கள் மற்றும் படகுகளின் கட்டளை அதிகாரிகளாகப் பொறுப்பேற்கவுள்ள அதிகாரிகளுக்காக கப்பற்படைக் கட்டளையினால் 15 ஆவது தடவையாகவும் நடாத்தப்பட்ட Pre Command Training பாடநெறியானது, 2026 ஒக்டோபர் 24 ஆம் திகதி திருகோணமலை கடற்படை கப்பல்தளத்தில் வெற்றிகரமாக நிறைவுற்றதுடன், அதன் நிறைவு கடற்படை பிரதிப் பிரதம அதிகாரியும் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியுமான ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே தலைமையில் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் அட்மிரல் வசந்த கரன்னாகொட கேட்போர் கூடத்திதில் நடைபெற்றது.

2026 ஒக்டோபர் 05 ஆம் திகதி ஆரம்பமான இப் பயிற்சிப் பாடநெறியில் 25 சிரேஷ்ட அதிகாரிகள் பங்கேற்றதுடன், எதிர்காலத்தில் கப்பல்களின் கட்டளை அதிகாரிகள் அல்லது பொறுப்பாதிகாரிகளாக கடமையாற்றவுள்ள அதிகாரிகளின் தொழின்முறைத் திறன், தலைமைத்துவ ஆளுமை மற்றும் கட்டளையிடும் தயார்நிலை ஆகியவற்றை மேம்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும்.

அதற்கமைய, கோட்பாடு மற்றும் நடைமுறை பயிற்சி அமர்வுகள், கப்பல் சார்ந்த பயிற்சிகள் மற்றும் உருவகப்படுத்தப்பட்ட பயிற்சி முறைகளை ஒருங்கிணைத்து நடைமுறைப்படுத்துவதன் மூலம், கடலில் செயல்பாட்டு தயார்நிலை, சரியான தீர்மானங்களை எடுக்கும் திறன் மற்றும் பயனுள்ள கட்டளையிடும் திறன்களை மேம்படுத்துவது இப்பயிற்சியில் உள்ளடக்கப்பட்டிருந்தது. கடற்படை மற்றும் கடலோரக் காவல்ப் படைத் திணைக்களத்தின் எதிர்கால கட்டளை அதிகாரிகளாக தமது பொறுப்புகளை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்குத் தேவையான அறிவு, திறன்கள் மற்றும் தொழின்முறைத் திறன்களை மேலும் விரிவுபடுத்துவதும் இப்பாடநெறியின் மூலம் எதிர்பார்க்கப்டுகிறது.

மேலும், இந்நிறைவு விழா நிகழ்வில் கொடி அதிகாரி கப்பற்படை கட்டளை, ரியர் அட்மிரல் ஹரித ஜயதேவ, கிழக்கு கடற்படை கட்டளையின் திணைக்களத் தலைவர்கள், கப்பல்கள் மற்றும் படகுகளின் கட்டளை அதிகாரிகள் உட்பட திருகோணமலை கடற்படை கப்பல்தளத்தின் அதிகாரிகள் மற்றும் கடற்படை வீரர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Accessibility Tools