Sri Lanka Navy – Official Logo
EVENT NEWS › 2026

'க்ளீன் ஸ்ரீலங்கா' தேசிய திட்டத்தின் கீழ் கடற்படையினால் சமூக சுகாதார மேம்பாட்டு திட்டம்

21 Jul 2026

'க்ளீன் ஸ்ரீலங்கா' தேசிய திட்டத்தின் கீழ் "ஆரோக்கியம்" தேசிய நல்வாழ்வு திட்டத்திற்கு இணையாக, இலங்கை கடற்படையினரால் சமூக சுகாதார மேம்பாட்டு திட்டமொன்று திருகோணமலை வீதி அபிவிருத்தி அதிகார சபை வளாகத்தில் 2026 ஜூலை 20 ஆம் திகதி நடாத்தப்பட்டது.

அதற்கமைய, திருகோணமலை பிரதேச மக்களுக்கு பொது சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், அவசர சுகாதார பேரிடர் சூழ்நிலைகளை நிர்வகிக்கும் திறனை மேம்படுத்துவதும் இதன் மூலம் மேற்கொள்ளப்பட்டதோடு, அதற்கு மேலதிகமாக மார்பக புற்றுநோய் பரிசோதனைகளும் கிழக்கு கடற்படை கட்டளையின் சுகாதார பணியாளர்களால் நடாத்தப்பட்டன.

'க்ளீன் ஸ்ரீலங்கா' தேசிய திட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஜனாதிபதி செயலணியின் முதன்மை பங்காளராக, இலங்கை கடற்படையினர் இவ்வாறான திட்டங்களின் ஊடாக ஆரோக்கியமான சமுதாயமொன்றைக் கட்டியெழுப்புவதற்கு பங்களிப்பினை வழங்க எதிர்பார்க்கின்றனர்.

Accessibility Tools