விளையாட்டு செய்திகள்
2024 டக்கா மரதன் போட்டித்தொடரில் கடற்படை வீரர் ஆர்.டி.என்.எஸ் கருணாரத்ன 7வது இடத்தை வென்றார்.
2024 ஜனவரி 26 ஆம் திகதி பங்களாதேஷில் நடைபெற்ற 'டக்கா மரதன் போட்டித்தொடர் - 2024' இல் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை வீரர் ஆர்டிஎன்எஸ் கருணாரத்ன ஏழாவது (07) இடத்தை வென்றார்.
28 Jan 2024
19வது ஆசிய மரதன் சாம்பியன்ஷிப் - 2024 போட்டியில் ஐந்தாவது இடத்தை இலங்கை கடற்படை வீராங்கனை எம்எஸ்பிஎம் பெரேரா வென்றார்
2024 ஜனவரி 21 ஆம் திகதி ஹொங்கொங்கில் நடைபெற்ற '19வது ஆசிய மரதன் சாம்பியன்ஷிப் - 2024' இல் இலங்கை கடற்படை வீராங்கனை எம்.எஸ்.பி.எம். பெரேரா கலந்துகொண்டு ஐந்தாவது (05) இடத்தை வென்றார்.
24 Jan 2024
இலங்கை நாக் அவுட் பேஸ்பால் போட்டித்தொடரில் கடற்படை ஆண்கள் பேஸ்பால் அணி இரண்டாம் இடத்தை வென்றது
இலங்கை நாக் அவுட் பேஸ்பால் போட்டித்தொடர் 2024 ஜனவரி 06 முதல் 21 ஆம் திகதி வரை தியகம இலங்கை ஜப்பான் நட்புறவு பேஸ்பால் விளையாட்டரங்கில் நடைபெற்றதுடன் அங்கு இறுதிப் போட்டியில் கடற்படை ஆண்கள் பேஸ்பால் அணி இரண்டாம் இடத்தைப் பெற்றது.
23 Jan 2024
'தேசிய படகோட்டம் போட்டித்தொடர்' காக தீவில் வெற்றிகரமாக முடிவடைந்தது
தேசிய படகோட்டம் போட்டித்தொடர் 2024 ஜனவரி 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் மட்டக்குளி காக தீவில் பிரதிப் தலைமை அதிகாரி மற்றும் பணிப்பாளர் நாயகம் செயற்பாடுகள் ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்கவின் தலைமையில் வெற்றிகரமாக நடைபெற்றது, இதில் கடற்படை படகோட்டம் அணி பல வெற்றிகளைப் பெற்றது.
22 Jan 2024
'தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - 2023'ல் பல வெற்றிகளை கடற்படை விளையாட்டு வீரர்கள் பெற்றனர்
96வது 'தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - 2023' (96th BASL Men & Women National Boxing Championship 2023) 2024 ஜனவரி 17 ஆம் திகதி கொழும்பு ராயல் கல்லூரியின் ராயல் மாஸ் அரினா குத்துச்சண்டை வளையத்தில் நடைபெற்றது. இதில் கடற்படை ஆண்கள் மற்றும் பெண்கள் குத்துச்சண்டை அணிகள் பல வெற்றிகளைப் பெற்றனர்.
18 Jan 2024
‘Sweep & Shoot 2024 Two Gun Championship’ துப்பாக்கி சுடும் போட்டித்தொடரில் கடற்படைக்கு பல வெற்றிகள்
2024 ஜனவரி 12 முதல் 14 வரை வெலிசர கடற்படை துப்பாக்கிச் சுடுதல் தளத்தில் நடைபெற்ற ‘Sweep & Shoot 2024 Two gun Championship’ நடைமுறை பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டித்தொடரில், கடற்படை வீரர்கள் தனித்தனியாகவும் அணிகளாகவும் பல வெற்றிகளைப் பதிவு செய்தனர்.
17 Jan 2024
சர்வதேச அளவில் பதக்கங்கள் வென்ற கடற்படை விளையாட்டு வீரர்களுக்கு கடற்படை தளபதியின் பாராட்டு
தாய்நாட்டிற்காக சர்வதேச விளையாட்டு சாதனைகளை படைத்த கடற்படை வீர வீராங்கனைகள் 2024 ஜனவரி 16 ஆம் திகதி கடற்படை விளையாட்டு வாரியத்தின் தலைவரான கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தனர். அங்கு அவர்களின் விளையாட்டு சாதனைகளை பாராட்டி கடற்படை தளபதியினால் அவர்களுக்கு பெறுமதியான பணப்பரிசுகள் வழங்கப்பட்டன.
17 Jan 2024
'மஹமேருவ சுப்பர் கிராஸ்' ஓட்டப் பந்தயத்தில் மோட்டார் சைக்கிள் பிரிவில் பல வெற்றிகளை கடற்படை பெற்றுள்ளது
இலங்கை மோட்டார் வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'மஹமேருவ சுப்பர் கிராஸ்' பந்தயப் போட்டித்தொடர் 2024 ஜனவரி 14 ஆம் திகதி கிரியுல்ல, மஹமேருவ பந்தயப் பாதையில் நடைபெற்றது, இதில் கடற்படை வீர்ர்கள் மோட்டார் சைக்கிள் பிரிவில் பல வெற்றிகளை பெற்றனர்.
15 Jan 2024
2023 தேசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டித்தொடரில் கடற்படையிலிருந்து மூன்று புதிய தேசிய சாதனைகள்
2023 டிசம்பர் 27 முதல் 30 வரை பொலன்னறுவ தேசிய விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற தேசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் 87 கிலோகிராம் மூத்த பெண்கள் பளுதூக்குதல் நிகழ்வில் பங்கேற்ற கடற்படை வீராங்கனை பி.சி.பிரியந்திவினால் 2023 டிசம்பர் 28 ஆம் திகதி மூன்று புதிய தேசிய சாதனைகள் நிறுவப்பட்டது.
29 Dec 2023
கடற்படை கட்டளைகளுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டித்தொடர் வெற்றிகரமாக நிறைவடைந்தது
கடற்படை கட்டளைகளுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டித்தொடர் – 2023 வெலிசர இ.க.க கெமுனு நிறுவனத்தின் கமாண்டர் பராக்கிரம சமரவீர உள்ளக விளையாட்டரங்கில் 2023 நவம்பர் 06 முதல் டிசம்பர் 02 வரை நடைபெற்றதுடன் இதில் ஆண்களுக்கான சாம்பியன்ஷிப்பை பயிற்சித் கட்டளையும் பெண்களுக்கான சாம்பியன்ஷிப்பை மேற்கு கடற்படை கட்டளையும் வென்றது.
06 Dec 2023