விளையாட்டு செய்திகள்
பாதுகாப்பு சேவைகள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பை கடற்படை வென்றது

2021 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட 11 ஆவது பாதுகாப்புச் சேவைகள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டித்தொடரில் சிறந்து விளங்கிய இலங்கை கடற்படை பாதுகாப்பு சேவைகள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பை வென்றது. போட்டியின் முடிவில், பரிசு வழங்கும் விழா 2021 மார்ச் மாதம் 20 ஆம் திகதி நாராஹேன்பிட இலங்கை இராணுவ டென்னிஸ் மைதானத்தில், கடற்படைத் தளபதி மற்றும் கடற்படை விளையாட்டு வாரியத்தின் தளபதி, வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலமையில் நடைபெற்றது.
21 Mar 2021
Bart’s Bash Sailing Regatta – 2020 படகோட்டம் போட்டித்தொடரில் இலங்கை கடற்படை வீரர்கள் பிரகாசிப்பு

சிலோன் மோட்டார் யொட் கழகத்தினால் (Ceylon Moter Yacht Club) ஏற்பாடு செய்யப்பட்ட Bart’s Bash Sailing Regatta – 2020 படகோட்டம் போட்டித்தொடர் கடந்த செப்டம்பர் 13 ஆம் திகதி பொல்கொட நீர்த்தேக்கத்தில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன் அங்கு கடற்படை வீரர்கள் பல வெற்றிகள் பெற்று தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
18 Sep 2020
இலங்கை கடற்படை கப்பல் தம்மென்னா நிறுவனத்தில் புதிதாக கட்டப்பட்ட கைப்பந்து மைதானம் திறக்கப்பட்டுள்ளது.

வட மத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் தம்மென்னா நிறுவனத்தில் கட்டப்பட்ட புதிய கைப்பந்து மைதானம் 2020 ஆகஸ்ட் 08 அன்று வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதியால் திறந்து வைக்கப்பட்டது.
10 Aug 2020