‘Navy Monthly Medal Golf Tournament - 2025” வெற்றிகரமாக நிறைவடைந்தது
கடற்படை கோல்ப் கழகத்தால் நான்காவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட ‘Navy Monthly Medal Golf Tournament - 2025”, வெலிசறை கோல்ப் மைதானத்தில் 2025 டிசம்பர் 28 அன்று வெற்றிகரமாக நடைபெற்றதுடன், வெற்றியாளர்களுக்கு கடற்படை கோல்ப் கழகத்தின் தலைவர் ரியர் அட்மிரல் ஜகத் குமார பரிசுகளை வழங்கினார்.
அதன்படி, கடற்படை வீரர்களிடையே விளையாட்டுத்திறன், உடல் தகுதி மற்றும் நட்புறவை ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போட்டியின் ஒட்டுமொத்த ஆண்கள் சாம்பியன்ஷிப், Net winner மற்றும் Gross Winner கோப்பைகளை வானொலி தொழில்நுட்ப வல்லுநர் டிஎம்எஸ்எம் வன்னிநாயக்கவும், ஒட்டுமொத்த பெண்கள் சாம்பியன்ஷிப்பை கடற்படை பெண் மாலுமி ஏஎம் உமயங்கனியும் வென்றனர்.
மேலும், இந்தப் போட்டியில், Net runner up மற்றும் Gross runner up கோப்பைகளை கெப்டன் துஷார ஜெயவர்தனவும் Nearest to the pin கோப்பையை வானொலி தொழில்நுட்ப வல்லுநர் டிஎம்எஸ்ஐ குணவர்தனவும், Longest Drive கோப்பையை கொமடோர் நலிந்த திசாநாயக்கவும் வென்றனர்.






















