கட்டளைகளுக்கிடையேயான நீச்சல் மற்றும் நீர் பந்து போட்டித்தொடர் இலங்கை கடற்படை கப்பல் கெமுனு நிருவனத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தது

கட்டளைகளுக்கிடையேயான நீச்சல் மற்றும் நீர் பந்து போட்டித்தொடர் 2024 நவம்பர் 04 ஆம் திகதி முதல் 07 ஆம் திகதி வரை இலங்கை கடற்படை கப்பல் கெமுனு நிருவனத்தில் நடைபெற்றதுடன், மேலும் ஆண்களுக்கான நீச்சல் சாம்பியன்ஷிப்பை கடற்படை ஏவுகணைக் கட்டளையும் பெண்களுக்கான நீச்சல் சாம்பியன்ஷிப்பை பயிற்சி கட்டளையும் ஆண்கள் நீர் பந்து சாம்பியன்ஷிப்பை கிழக்கு கடற்படை கட்டளையும், பெண்கள் நீர் பந்து சாம்பியன்ஷிப்பை பயிற்சி கட்டளையும் வென்றன.

கடற்படை வீர வீராங்கனைகள் பலர் பங்குபற்றிய போட்டித்தொடரில், சிறந்த வீரருக்கான கோப்பையை ஏவுகணை கட்டளையைச் சேர்ந்த சப்-லெப்டினன்ட் பெரேராவும், சிறந்த வீராங்கனைக்கான கோப்பையை பயிற்சி கட்டளையைச் சேர்ந்த பெண் கேடட் அதிகாரி டபிள்யூஎம்டிகே பண்டாரவும், பெண் மாலுமி பிஎன்என் பியசிரியும் வென்றனர். சிறந்த ரெட்குட் நீச்சல் வீரருக்கான கோப்பையை கிழக்கு கடற்படை கட்டளையைச் சேர்ந்த ரெட்குட் பிஜிகேடி ஜயரத்னவும், சிறந்த ரெட்குட் நீச்சல் வீராங்கனைக்கான கோப்பையை பயிற்சி கட்டளையைச் சேர்ந்த ரெட்குட் கேடபிள்யூஎன் மதுஹன்சனியும், போட்டியின் சிறந்த வீரருக்கான கோப்பையை வடமேற்கு கடற்படை கட்டளையைச் சேர்ந்த சீப் பெட்டி ஒபிசர் கேஏஎஸ் குமாரவும் வென்றனர்.

இதேபோல், நீர் பந்து போட்டியின் சிறந்த வீரராக இறுதிப் போட்டியில் 05 கோல்கள் உட்பட, போட்டியில் 29 கோல்களை பெற்ற கிழக்கு கடற்படை கட்டளையைச் சேர்ந்த சப்-லெப்டினன்ட் எம்டிஎன்எல் இலுக்பிட்டியவும் சிறந்த வீராங்கனையாக போட்டியில் 15 கோல்கள் மற்றும் இறுதிப் போட்டியில் 8 கோல்கள் பெற்ற பயிற்சி கட்டளையின் பெண் மாலுமி எல்ஏயு குமாரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.