2025 ஆம் ஆண்டுக்கான கட்டளைகளுக்கிடையிலான கைப்பந்து போட்டியில், இலங்கை கடற்படை கட்டளை மற்றும் தெற்கு கடற்படை கட்டளை அணிகள் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் சாம்பியன்ஷிப்பை வென்றது

2025 ஆம் ஆண்டுக்கான கட்டளைகளுக்கிடையிலான கைப்பந்து போட்டித்தொடர் 2025 அக்டோபர் 03 முதல் 08 வரை வெலிசரவில் உள்ள கமாண்டர் பராக்கிரம சமரவீர நினைவு உட்புற விளையாட்டு வளாகத்தில் நடைபெற்றதுடன், இதில் ஆண்கள் சாம்பியன்ஷிப்பை கடற்படை கட்டளையும், பெண்கள் சாம்பியன்ஷிப்பை தெற்கு கடற்படை கட்டளையும் வென்றன.

இந்தப் போட்டித்தொடரில் அனைத்து கடற்படை கட்டளைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏராளமான விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனதுடன், மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜகத் குமாரவின் தலைமையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், கடற்படை கட்டளை கிழக்கு கடற்படை கட்டளையை 3-1 என்ற கணக்கில் தோற்கடித்து போட்டியின் ஆண்கள் சாம்பியன்ஷிப்பை வென்றது. இந்த நிகழ்வில், லெப்டினன்ட் டி.இ.எஸ் ஜெயக்கொடி சிறந்த விளையாட்டு வீரருக்கான கோப்பையை வென்றார்.

இதேபோல், பெண்கள் இறுதிப் போட்டியில், தெற்கு கடற்படை கட்டளை அணி மேற்கு கடற்படை கட்டளை அணியை 2-0 என்ற கணக்கில் தோற்கடித்து சாம்பியன்ஷிப்பை வென்றதுடன், பெண் மாலுமியான எச்.ஏ.டி.டி குமாரி சிறந்த வீராங்கனைக்கான கோப்பையை வென்றார்.