வடக்கு பிராந்தியத்தில் தீவுகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டியொன்றை கடற்படை ஏற்பாடு செய்துள்ளது
கடற்படைக்கும் வடக்கு பிராந்தியத்தின் பொதுமக்களிற்கும் இடையில் காணப்படும் நல்லிணக்கத்தை மேலும் ஊக்குவிக்கும் நோக்கில் எழுவைதீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகிய தீவுகளிற்கு அன்மையில் ஒரு கைப்பந்து போட்டி ஏற்பாடு செய்யப்பட்டதுடன், இறுதிப் போட்டி 2025 ஏப்ரல் 29 அன்று காரைநகர் வேலப்பெட்டி கைப்பந்து மைதானத்தில் நடைபெற்றது.
இலங்கை கடற்படை கப்பல் எலார நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கைப்பந்து போட்டி, எழுவைதீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகிய தீவுகளைச் சேர்ந்த இளைஞர்கள் நூறு பேரால் (100) ஆன அணிகள் மற்றும் கடற்படை அணிகளிகன் பங்கேற்புடன் நடத்தப்பட்தோடு, ஒவ்வொரு தீவுக்கும் இடையே நடைபெற்ற முதற்கட்டப் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் இறுதிப் போட்டியில் இணைந்தன.
மேலும், இந்தப் போட்டியை ஏற்பாடு செய்வதன் மூலம், வடக்குப் பிராந்திய மக்களுக்கும் கடற்படைக்கும் இடையிலான நீண்ட காலப் பிணைப்பை அடையாளப்படுத்தவும், கடற்படைக்கும் பொதுமக்கள் சமூகத்திற்கும் இடையிலான நல்லுறவை வலுப்படுத்தவும் கடற்படையானது எதிர்ப்பார்கின்றது.