'மஹாமெருவ ரேலி கிராஸ் - 2025' பந்தயத்தில் மோட்டார் சைக்கிள் பிரிவில் கடற்படை வெற்றி பெற்றது

இலங்கை மோட்டார் வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 'மஹாமெருவ ரேலி கிராஸ் - 2025' போட்டி, 2025 ஏப்ரல் 27 ஆம் திகதி கிரியுல்லவில் உள்ள மஹாமெருவ பாதையில் நடைபெற்றது, இதில் கடற்படை விளையாட்டு வீரர்கள் மோட்டார் சைக்கிள் பிரிவில் வெற்றி பெற்றனர்.

அதன்படி, Racing 125cc, 125 STD, Super Mortared Race-01, Super Mortared Race-02 மற்றும் 250 STD ஆகிய பிரிவில் கடற்படை மோட்டார் சைக்கிள் பிரிவில் விளையாட்டு வீரர்கள் பங்குபற்றியதுடன் ஒவ்வொரு பரிவிலும் அவர்கள் பின்வருமாறு தனது வெற்றிகளை தன்வசப்படுத்திக் கொண்டனர்.

Racing 125 cc

கனிஷ்ட அதிகாரி டி.எம்.எஸ்.எஸ். குமார ஆறாவது இடம்

கடற்படை உடற்பயிற்சி பயிற்சியாளர் ஈ.ஏ.பி.என் எதிரிசிங்க நான்காம் இடம்

125 STD

கனிஷ்ட அதிகாரி டி.எம்.எஸ்.எஸ். குமார நான்காம் இடம்

பொறியாளர் தொழில்நுட்ப வல்லுநர் கே.எச்.சி. குணவர்தன ஐந்தாவது இடம்

கடற்படை வீரர் எச்.ஏ.கே சாமர ஏழாவது இடம்

Super Mortared Race-01

பொறியாளர் தொழில்நுட்ப வல்லுநர் எம்.வி.டபிள்யூ.பி. கருணாரத்ன ஏழாவது இடம்

Super Mortared Race-02

பொறியாளர் தொழில்நுட்ப வல்லுநர் எம்.வி.டபிள்யூ.பி. கருணாரத்ன ஆறாவது இடம்

250 STD

கடற்படை உடற்பயிற்சி பயிற்சியாளர் ஈ.ஏ.பி.என் எதிரிசிங்க இரண்டாம் இடம்