13வது பாதுகாப்பு சேவைகள் டெனிஸ் சாம்பியன்ஷிப்பை கடற்படை வென்றது

13வது பாதுகாப்பு சேவைகள் டெனிஸ் போட்டிதொடர் 2025 மார்ச் 24 முதல் 28 வரை நாரஹேன்பிட்டியவில் உள்ள இலங்கை இராணுவ டெனிஸ் மைதானத்தில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன், போட்டிகள் முழுவதிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை கடற்படையினர், இலங்கை கடற்படைக்கான 13வது பாதுகாப்பு சேவைகள் டெனிஸ் சம்பியன்ஷிப்பை வென்றனர்.

இந்தப் போட்டித் தொடரில்; குழுப் பிரிவு, திறந்த ஒற்றை மற்றும் இரட்டைப் பிரிவு, 45 வயதுக்கும், 50 வயதுக்கும் மேற்பட்ட ஒற்றை மற்றும் இரட்டைப் ஆகிய பிரிவுகளில் நடைபெற்ற போட்டி நிகழ்வுகளில் முப்படைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

இதன்படி, போட்டி முழுவதும் சிறப்பாக விளையாடிய கடற்படை வீரர்கள் 16 தங்கப் பதக்கங்களையும் 05 வெள்ளிப் பதக்கங்களையும் பெற்று, இராணுவ அணி பெற்ற 27 புள்ளிகளையும், விமானப்படை அணி பெற்ற 33 புள்ளிகளையும் முறியடித்து, மொத்தப் போட்டியிலும் 39 புள்ளிகளைப் பெற்று, இலங்கைக்கான 13வது பாதுகாப்பு சேவைகள் டெனிஸ் சம்பியன்ஷிப்பை இலங்கைக்கு பெற்றுக் கொடுத்தனர்.