கட்டளைகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டித் தொடரில் - 2025 சாம்பியன்ஷிப்பை கிழக்கு கடற்படை கட்டளை வென்றது
இலங்கை கடற் கபடைட்டளைகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டித் தொடரின் - 2025 இறுதிப் போட்டியானது 2025 மார்ச் 28 அன்று வெலிசர கடற்படை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றதுடன், கிழக்கு கடற்படை கட்டளையானது சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்தப் போட்டியின் ஆரம்பச் சுற்றுப் போட்டிகள் ‘ஏ’ மற்றும் ‘பி’ என இரண்டு பிரிவுகளின் கீழ் இலங்கை கடற்படை கப்பல் சிக்ஷா மற்றும் கடற்படை மற்றும் கடல்சார் அகாடமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றதன் பின்னர், அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்ற அணிகள் வெலிசர கடற்படை கிரிக்கெட் மைதானத்தில் நடந்த அரையிறுதிப் போட்டிகளில் பங்கேற்றன.
அரையிறுதியில் இருந்து, வட மத்திய கடற்படை கட்டளை மற்றும் கிழக்கு கடற்படை கட்டளை ஆகியன இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதுடன், அங்கு 50 ஓவர்கள் முடிவில் கிழக்கு கடற்படை கட்டளை வீரர்கள் 10 விக்கெட்டுகளை இழந்து 260 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வடமத்திய கட்டளை அணி 43 ஓவர்கள் 05 பந்துகளில் 203 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டதுடன், அதன்படி, கட்டளைகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டித் தொடரில் - 2025 சாம்பியன்ஷிப்பை கிழக்கு கடற்படை கட்டளை வென்றது. போட்டியில் மூன்றாம் இடத்தை வட மேற்கு கடற்படை கட்டளை பெற்றுக்கொண்டது.
போட்டியில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்திய கடற்படை வீரர்களுக்கு பதக்கங்கள், கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் பின்வருமாறு வழங்கப்பட்டன;
1. போட்டியின் சிறந்த பந்துகாப்பாளர் - கிழக்கு கடற்படை கட்டளையை பிரதிநிதித்துவப்படுத்திய டபிள்யூ.பி.எம்.ராஜபக்ஷ (06 போட்டிகளில் 07 பிடியெடுப்புக்கள்)
2. போட்டியின் சிறந்த பந்துவீச்சாளர் - பயிற்சி கட்டளையை பிரதிநிதித்துவப்படுத்திய லெப்டினன்ட் ஆர்.எ.பி.எம் ரணசிங்க (06 இன்னிங்ஸ்களில் 15 விக்கெட்டுகள்)
போட்டியின் சிறந்த துடுப்பாளர் - வடமத்திய கடற்படை கட்டளைப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஆர்.எம்.ஜி.ஏ.கே ரத்நாயக்க(04 இன்னிங்ஸ்சில் சராசரி 78.00 இல் 234 ஓட்டங்கள்)
4. ஆட்ட நாயகன் கோப்பை - கிழக்கு கடற்படை கட்டளையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜிவிஎம்எம்இ பெர்னாண்டோ (41 பந்துகளில் 76 ஓட்டங்கள்)
5. போட்டியின் சிறந்த வீரர் வட மத்திய கடற்படை கட்டளையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆர்.எம்.ஜி.ஏ.கே. ரத்நாயக்க (234 ரன்கள், 08 விக்கெட்டுகள் மற்றும் 04 பிடியெடுப்புக்கள்)
மேலும், இந்நிகழ்வில் இலங்கை கடற்படை கிரிக்கெட்டின் தலைவரும் கடற்படையின் தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, கடற்படை தலைமையகம் மற்றும் மேற்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் குழுவும் கலந்து கொண்டனர்.