கடற்படை கட்டளைகளுக்கு இடையேயான ஹொக்கி போட்டித்தொடர் வெற்றிகரமாக நிறைவடைந்த்து
இலங்கை கடற்படை கட்டளைகளுக்கு இடையேயான ஹொக்கி போட்டித்தொடர் 2025 மார்ச் 04 முதல் 07 ஆம் திகதி வரை வெலிசர இலங்கை கடற்படை நிறுவனத்தின் ஹொக்கி மைதானத்தில் இடம்பெற்றதுடன், ஆண்களுக்கான சம்பியன்ஷிப்பை மேற்கு கடற்படை கட்டளையும் பெண்களுக்கான சம்பியன்ஷிப்பை பயிற்சி கடற்படை கட்டளையும் வென்றன.
இலங்கை கடற்படை கட்டளைகளுக்கு இடையேயான ஹொக்கி போட்டித்தொடர் - 2025 ஆம் ஆண்டிற்கான கடற்படை கட்டளைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 09 ஆண்கள் அணிகளும் 07 பெண்கள் அணிகளும் பங்குபற்றியதுடன், மேற்கு கட்டளையை பிரதிநிதித்துவப்படுத்திய கேஜிடிவிகே கிரேரு போட்டியின் சிறந்த வீர்ருக்கான விருதையும் சிறந்த வீராங்கனைக்கான விருதை பயிற்சி கட்டளையின் வீராங்கனையான கேஜிகேவி ரணவீர ஆகியோர் வென்றனர். போட்டியின் சிறந்த வலை காப்பாளருக்கான விருதை மேற்கு கட்டளையை பிரதிநிதித்துவப்படுத்திய லெப்டினன்ட் எஸ்.டி.கருணாரத்னவும், சிறந்த வலை காப்பாளர் வீராங்கனைக்கான விருதை தெற்கு கடற்படை கட்டளையை பிரதிநிதித்துவப்படுத்திய பெண் உடற் பயிற்சியாளர் எஸ்ஏடிஎம் சமரவீரவும் வென்றனர்.
அத்துடன் போட்டியின் பரிசளிப்பு விழா மேற்கு கடற்படை கட்டளை தளபதி தலைமையில் இடம்பெற்றது. அங்கு ஆண்கள் சாம்பியன்ஷிப் கோப்பையை மேற்கு கடற்படைக் கட்டளையும், அதன் இரண்டாம் இடம் தெற்கு கடற்படை கட்டளை மற்றும் பெண்களுக்கான சாம்பியன்ஷிப்பை பயிற்சி கடற்படை கட்டளையும், இரண்டாம் இடத்தை தெற்கு கடற்படை கட்டளையும் வென்றன.