"விமானப்படை சைக்கிள் சவாரி 2025" முதல் கட்டத்தின் வெற்றி கடற்படைக்கு

இலங்கை விமானப்படையின் 74வது ஆண்டு நிறைவு விழாவுடன் இணைந்து 26வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட "விமானப்படை சைக்கிள் சவாரி 2025" 2025 பெப்ரவரி மாதம் 28 முதல் மார்ச் 02 வரை மூன்று (03) கட்டங்களில் நடைபெற்றதுடன், அங்கு வீரவிலவிலிருந்து இரத்தினபுரி வரையிலான முதலாவது கட்டத்தில் வெற்றியினை கடற்படையிற்கு கடற்படை வீரர் டி.ஏ.எஸ் பிரசங்க பெற்று தந்தார்

வீரவிலவிலிருந்து இரத்தினபுரி, கண்டி, குருநாகல் மற்றும் கட்டுநாயக வழியாக காலி முகத்துவாரம் வரையிலான 408 கிலோமீற்றர் தூரத்தை உள்ளடக்கிய இந்தப் போட்டியில் முப்படையினர், பொலிஸார் உள்ளிட்ட வெளிநாட்டு விளையாட்டுக் கழகங்கள் உட்பட தீவின் முன்னணி சைக்கிள் ஓட்டக் கழகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி 166 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

மேலும், இந்த போட்டி தொடரானது கண்டியில் இருந்து கொழும்பு வரை நடைபெற்ற மூன்றாவது போட்டியில் கடற்படைவீர்ர் பிபிபிஎம்ஜி சில்வா இரண்டாம் இடத்தையும், மீரிகமவில் இருந்து கொழும்பு வரையிலான மகளிர் அணிகளிற்கான இரண்டாம் இடத்தை கடற்படை மகளிர் சைக்கிள் அணியும் வென்றது.