'55வது சிரேஷ்ட தேசிய கெரம் சாம்பியன்ஷிப் 2025' மகளிர் சாம்பியன்ஷிப்பை பெண் மாலுமி ஜே ரொஷிடா வென்றார்

'55வது சிரேஷ்ட தேசிய கெரம் சாம்பியன்ஷிப் 2025', 2025 ஜனவரி மாதம் 18 முதல் மார்ச் மாதம் 02ஆம் திகதி வரை கொழும்பு கரம் சங்கத் தலைமையகத்தில் நடைபெற்றதுடன், இதில் கடற்படை பெண் மாலுமி ஜே ரொஷிடா போட்டித் தொடரில் கடற்படைக்கான மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன்ஷிப்பை வென்றார்.

இதில் தீவின் பல பிரபலமான கெரம் விளையாட்டு கழகங்கள் மற்றும் பாடசாலை விளையாட்டு வீர வீராங்கனைகளின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இந்த சாம்பியன்ஷிப்பின் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் பெண் மாலுமி ஜே ரொஷிடா கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்டார்.

அதன்படி, சிறந்த விளையாட்டுத்திறனை வெளிப்படுத்திய பெண் மாலுமி ஜே ரொஷிடா போட்டித் தொடரில் பெண்களுக்கான தேசிய கெரம் சம்பியன்ஷிப்பை வென்று கடற்படைக்கு பெருமை சேர்த்தார்.

மேலும், இந்தப் போட்டித் தொடரில், கடற்படை வீரர் என் பெர்னாண்டோ ஆண்களுக்கான சம்பியன்ஷிப்பில் மூன்றாம் இடத்தையும், கடற்படை வீரர் ஏ ஜயவர்தன ஐந்தாம் இடத்தையும் பெற்றனர்.