‘National Sailing Championship - 2025’ போட்டித்தொடர் காக்கை தீவில் வெற்றிகரமாக முடிவடைந்தது
‘National Sailing Championship - 2025’ போட்டித்தொடர் 2025 பெப்ரவரி 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் மட்டகுலியில் உள்ள காக்கை தீவில், போட்டித்தொடரானது வெற்றிகரமாக நடைபெற்றதுடன், அங்கு கடற்படை படகோட்டுதல் அணி அதன் ஒட்டுமொத்த பட்டத்தையும் வென்றது.
ஆண்கள் மற்றும் பெண்களுக்காக நடாத்தப்பட்ட ‘National Sailing Championship - 2025’ போட்டித்தொடருக்கு கடற்படை படகோட்டுதல் அணி உட்பட இலங்கையில் புகழ்பெற்ற பாய்மரக் கழகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் என்பத்து ஐந்து (85) வீர வீராங்கனைகள் கலந்துகொண்டதுடன், முதன்முறையாக யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர் குழுவொன்றும் இத் தேசிய பாய்மரப் போட்டியில் பங்குபற்றியது.
அதன்படி, GP 14 பிரிவில் முதலாம் இடத்தை கடற்படை வீரர் கே.சி.டி சொய்சா மற்றும் பொறியியல் கடற்படை வீரர் டி.டி.எஸ் பெரேராவும், இரண்டாம் இடத்தை கடற்படை வீரர் டி.பி.ஏ.எஸ் வீரதுங்க மற்றும் கடற்படை வீரர் ஜே.பி.எஸ் டி சில்வாவும், மூன்றாம் இடத்தை கடற்படை வீரர் ஏ.எம்.ஜே.பி அத்தநாயக்க மற்றும் கடற்படை வீரர் ஏ.எஸ்.கே.டி சொய்சா ஆகியோர் பெற்றனர். Enterprise பிரிவில் முதலாம் இடத்தை கடற்படை வீரர் கே.எஸ்.கே டி சில்வா மற்றும் பெண் கடற்படை வீரர் எம்.டி.எம் சுபாசினியும், இரண்டாம் இடத்தை கடற்படை வீரர் ஏ.ஜி.பி அசங்க மற்றும் கடற்படை வீரர் ஏ.எஸ் ஜோதிபாலவும், மூன்றாம் இடத்தை லெப்டினன்ட் பி.எஸ்.எஸ் கோம்ஸ் மற்றும் கடற்படை வீரர் எஸ்.பி.பி.என் குமாரவும் பெற்றனர்.
ILCA 6 பிரிவில், தலைமை கடற்படை வீரர் பி.டி,டி.எஸ் ராஜபக்ஷ முதலிடத்தையும், கடற்படை வீரர் ஜே.எஸ் செனவிரத்னவினால் இரண்டாம் இடத்தை மற்றும், கடற்படை வீரர் யு.டி ராஜபக்ஷ மூன்றாம் இடத்தையும் பெற்றனர். மேலும், ILCA 6 பிரிவில் முதலாம் இடத்தை கடற்படை வீரர் பி.டி.டி.எஸ் ராஜபக்ஷ மற்றும் இரண்டாம் இடத்தையும் கடற்படை வீரர் ஜே.எஸ்.செனவிரத்ன பெற்றனர்.
மேலும், பணிப்பாளர் நாயகம் சேவைகள் ரியர் அட்மிரல் சுஜீவ விரசூரிய தலைமையில் இடம்பெற்ற இப் போட்டிக்கு ஓய்வுபெற்ற சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள், கடற்படைத் தலைமையகம் மற்றும் மேற்கு கடற்படைக் கட்டளையைப் பிரதிநிதித்துவப்படுத்தி சிரேஷ்ட மற்றும் இளநிலை அதிகாரிகள், மாலுமிகள், பெற்றோர்கள் மற்றும் ஆர்வமுள்ள பெருந்தொகையான பார்வையாளர்ளும் கலந்துகொண்டனர்.