13வது பாதுகாப்பு சேவைகள் மேசை பந்து போட்டித்தொடரில் ஆண்கள் பிரிவின் அணி சாம்பியன்ஷிப்பை கடற்படை வென்றது
2024 நவம்பர் 26, 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் பனாகொட இராணுவ உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற 13வது பாதுகாப்பு சேவைகள் மேசை பந்து போட்டித்தொடரில் ஆண்கள் பிரிவில் அணி சாம்பியன்ஷிப்பை கடற்படை வீரர்கள் வென்றனர்.
அதன்படி, திறந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கலந்து கொண்ட கடற்படை வீரர் எச்.பி.வருஷவிதான மூன்றாம் இடத்தையும், 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கலந்து கொண்ட கடற்படை வீரர் பீ.டீ.ஐ.பீ சில்வா முதலாம் இடத்தையும் கெப்டன் சந்தன சமரகோன் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
மேலும், 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் இரட்டையர் பிரிவில் கேப்டன் சந்தன சமரகோன் மற்றும் கடற்படை வீரர் பீ.டீ.ஐ.பீ சில்வா ஆகியோர் சாம்பியன் பட்டத்தை வென்றனர், கலப்பு இரட்டையர் பிரிவில் கடற்படை வீர்ர் எச்.பி.வருஷவிதான மற்றும் கடற்படை வீராங்கனை எஸ்.பி.வை.எம்.என்.எஸ். சிவ்ரத்ன மூன்றாம் இடத்தையும் இதேவேளை, திறந்த ஆண்கள் இரட்டையர் பிரிவில் கடற்படை வீரர் பீ.டீ.ஐ.பீ சில்வா மற்றும் கடற்படை வீரர் எச்.பி வருஷவிதான இரண்டாம் இடத்தை வென்றனர்.
மேலும், இந்த போட்டித்தொடரில் மகளிர் திறந்த ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் மூன்றாம் இடத்தை கடற்படை வீராங்கனை எஸ்.பி.ஒய்.எம்.என்.எஸ்.சிவ்ரத்ன மற்றும் கடற்படை வீராங்கனை டி.எச். கொலபகே பெற்றுள்ளனர். இதேவேளை, லெப்டினன்ட் கமாண்டர் அனுராதா பெரேரா மற்றும் லெப்டினன்ட் கமாண்டர் அச்சினி கருணாரத்ன ஆகியோர் 30 வயதுக்கு மேற்பட்ட பிரிவுகளில் பெண்கள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் மூன்றாவது இடத்தையும் கைப்பற்றினர்.