கட்டளைகளுக்கிடையேயான நீச்சல் மற்றும் நீர் பந்துகள் போட்டித்தொடர் இலங்கை கடற்படை கப்பல் கெமுனு நிருவனத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தது

கட்டளைகளுக்கிடையேயான நீச்சல் மற்றும் நீர் பந்துகள் போட்டித்தொடர் 2024 நவம்பர் 05 ஆம் திகதி முதல் 08 ஆம் திகதி வரை இலங்கை கடற்படை கப்பல் கெமுனு நிருவனத்தில் நடைபெற்றதுடன், மேலும் ஆண்களுக்கான நீச்சல் சாம்பியன்ஷிப்பை கடற்படை ஏவுகணைக் கட்டளையும் பெண்களுக்கான நீச்சல் சாம்பியன்ஷிப்பை கிழக்கு கடற்படை கட்டளையும், நீர் பந்துகள் ஆண்கள் மற்றும் பெண்கள் சாம்பியன்ஷிப்களை கிழக்கு கடற்படை கட்டளையும் வென்றது.

கடற்படை வீர வீராங்கனைகள் பலர் பங்குபற்றிய போட்டித்தொடரில், ஆண்களுக்கான நீச்சல் சம்பியன்ஷிப்பை ஏவுகணைக் கட்டளையும், பெண்களுக்கான சம்பியன்ஷிப்பை கிழக்கு கடற்படை கட்டளை வென்றதுடன், இரண்டாம் இடத்தை கடற்படை பயிற்சி கட்டளை மற்றும் வடக்கு கடற்படை கட்டளைகள் வென்றது.

சிறந்த நீச்சல் வீரருக்கான கிண்ணத்தை ஏவுகணை கட்டளையின் துனை-லெப்டினன்ட் கே.என்.டி பெரேராவும், சிறந்த பெண் நீச்சல் வீராங்கனைக்கான கிண்ணத்தை கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீராங்கக்கான ஆர்.டி.எஸ்.ராஜபக்ஷவும் போட்டித்தொடரின் சிறந்த அனுபவமிக்க நீச்சல் வீரருக்கான கிண்ணத்தை மேற்கு கடற்படை கட்டளையின் கெப்டன் ஆர்.எம்.டி.எஸ்.ரணசிங்கவும் வென்றனர்.

மேலும், நீர் பந்துகள் போட்டித்தொடரில் சிறந்த வீரராக ஏவுகணை கட்டளையின் துனை-லெப்டினன்ட் எம்.டி.என்.எல். இலுக்பிட்டிய வெற்றி பெற்றதுடன், கிழக்கு கடற்படை கட்டளையின் பெண் மாலுமியான டபிள்யூ.பி.பி.டி.திசாநாயக்க சிறந்த வீராங்கனையாக தெரிவானார். அதன்படி, நீர் பந்துகள் போட்டித்தொடரில் ஆண் மற்றும் பெண்களுக்கான சம்பியன்ஷிப்களை கிழக்கு கடற்படை கட்டளையும், ஆண்களுக்கான இரண்டாம் இடத்தை பயிற்சி கட்டளையும், பெண்களுக்கான இரண்டாம் இடத்தை தெற்கு கடற்படை கட்டளையும் வென்றது.

இந்த போட்டித்தொடரின் பரிசளிப்பு விழா வெலிசறை இலங்கை கடற்படை கப்பல் தளத்தின் நீச்சல் தடாகத்தில் மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வுக்காக கொடி அதிகாரி ஏவுகணை கட்டளை கொமடோர் சஞ்சீவ பெரேரா, விளையாட்டுப் பணிப்பாளர் கொமடோர் மாலன் பெரேரா உட்பட சிரேஷ்ட மற்றும் இளநிலை அதிகாரிகள் கடற்படையினர் கலந்துகொண்டனர்.