கட்டளைகளுக்கு இடையேயான ஹொக்கிப் போட்டித்தொடர் வெலிசரையில் நிறைவடைந்தது
இலங்கை கடற்படை கட்டளைகளுக்கு இடையேயான ஹொக்கிப் போட்டித்தொடர் 2024 ஒக்டோபர் 08 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை வெலிசரை இலங்கை கடற்படை கப்பல் லங்கா நிறுவன ஹொக்கி மைதானத்தில் இடம்பெற்றதுடன், இங்கு ஆண்களுக்கான இணைச் சம்பியன்ஷிப்பை மேற்கு கடற்படைக் கட்டளை மற்றும் பயிற்சிக் கட்டளை வென்றதுடன் பெண்கள் இணைச் சாம்பியன்ஷிப்பை மேற்கு கடற்படை கட்டளை மற்றும் தெற்கு கடற்படை கட்டளை வென்றது.
கட்டளைகளுக்கு இடையேயான ஹொக்கிப் போட்டித்தொடர் 2024 க்காக கடற்படை கட்டளைகளைகள் பிரதிநிதித்துவப்படுத்தும் 09 ஆண்கள் அணிகளும் 07 பெண்கள் அணிகளும் பங்குபற்றியதுடன், போட்டியின் சிறந்த வீரருக்கான விருது பயிற்சி கட்டளையை பிரதிநிதித்துவப்படுத்திய லெப்டினன்ட் கே.டப்.ஜி.கே.ஜி திசாநாயக்கவும் சிறந்த வீராங்கனைக்கான விருது தெற்கு கடற்படை கட்டளையை பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை வீராங்கனை ஏ.ஏ.எல் அமரசிங்கவும் பெற்றனர்.
போட்டியின் பரிசளிப்பு விழா மேற்கு கடற்படை கட்டளையின் பிரதித் தளபதி கொமடோர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் இடம்பெற்றதுடன் தொண்டர் கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் லஷாந்த் என் ஹேவாவிதாரண உட்பட சிரேஷ்ட மற்றும் இளநிலை அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.