‘Layton Cup Boxing Tournament – 2024’ யில் கடற்படை பல பதக்கங்களை வென்றது

2024 ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் 05 ஆம் திகதி வரை கொழும்பு றோயல் கல்லூரி உள்ளக குத்துச்சண்டை அரங்கிலும் நீர்கொழும்பு பிரவுன்ஸ் கடற்கரையிலும் நடைபெற்ற ‘Layton Cup Boxing Tournament - 2024’ பொட்டித்தொடரில் கடற்படை குத்துச்சண்டை வீரர்கள் ஒரு தங்கப் பதக்கத்தையும் (01), ஐந்து வெள்ளிப் பதக்கங்களையும் (05) 10) வெண்கலப் பதக்கங்களையும் வென்றனர்.

இலங்கையின் (28) பிரபல குத்துச்சண்டை அணிகளின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இச்சுற்றுப்போட்டித்தொடரில் கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்தும் இருபத்தி ஒன்பது (29) விளையாட்டு வீரர்களும் மூன்று (03) பெண் வீராங்கனைகளும் கலந்துகொண்டனர். இதன்படி கடற்படை குத்துச்சண்டை அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் கடற்படை வீர்ர் எச்.ஏ.எஸ்.டீ ஹெட்டியாராச்சி 63.5 கிலோவிற்கு கீழ் எடைப் பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தி தங்கப்பதக்கத்தை வென்றார்.

92 கிலோவுக்கு மேல் எடைப் பிரிவின் கீழ் கடற்படை வீர்ர் கே.எம்.சி.கே கருணாநாயக்க, 63.5 கிலோ எடைப் பிரிவின் கீழ் கடற்படை வீர்ர் எஸ்.எம்.சி.எஸ் சமரக்கோன், 51 கிலோவுக்கு கீழ் கடற்படை வீர்ர் ஏ.எம்.ஜி.ஐ பண்டார, 57 கிலோவுக்கு கீழ் எடைப் பிரிவின் கீழ் கடற்படை வீர்ர் கே.எச் நவோத்ய ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.

கடற்படை வீர்ர் ஏ.டபிள்யூ. ஹெட்டிகே 92 கிலோ எடைப் பிரிவின் கீழ், கடற்படை வீர்ர் ஏ.டப்.ஏ மதுஷான் 86 கிலோ எடைப் பிரிவின் கீழ், கடற்படை வீர்ர் ஜே.பி. கௌசல்ய 86 கிலோ எடைப் பிரிவின் கீழ், கடற்படை வீர்ர் டப்.டீ.கே ஜெயசிங்க 71 கிலோ எடைப் பிரிவின் கீழ் கடற்படை வீர்ர் பி.எம்.எம்.தீப்திவர்தன மற்றும் கடற்படை வீர்ர் ஏ.எம்.டீ.எஸ் அதிகாரி 67 கிலோ எடைப் பிரிவின் கீழ் கடற்படை வீர்ர் என்.எச்.திலகரத்ன 63.5 கிலோ எடைப் பிரிவிலும், கடற்படை வீர்ர் எஸ்.ஐ. ரன்மால் 51 கிலோ எடைப் பிரிவிலும், கடற்படை வீரர் பீ.ஓ.ஓ.கே.ஐ.சீ பிரபாத் 48 கிலோ எடைப் பிரிவிலும் பங்கேற்று வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

மேலும், கடற்படை மகளிர் குத்துச்சண்டை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி, கடற்படை வீராங்கணை எச்.எம்.எச்.பி.ஜெயக்கொடி 71 கிலோவுக்கு கீழ் எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும், கடற்படை வீராங்கணை ஆர்.எம்.எஸ்.எஸ்.ரத்நாயக்க 57 கிலோவுக்குட்பட்ட எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர் .