கட்டளைகளுக்கு இடையேயான சைக்கிள் ஓட்டுதல் போட்டித்தொடர் - 2024 இலங்கை கடற்படை கப்பல் தம்பபண்ணி நிருவனத்தில் வெற்றிகரமாக முடிவடைந்தது

கட்டளைகளுக்கு இடையேயான சைக்கிள் ஓட்டுதல் போட்டித்தொடர் - 2024 இலங்கை கடற்படை கப்பல் தம்பபண்ணி நிருவனத்தில் 2024 செப்டம்பர் 28 ஆம் திகதி வெற்றிகரமாக நிறைவு பெற்றதுடன் அதன் ஆண்கள் சாம்பியன்ஷிப்பை கிழக்கு கடற்படை கட்டளை வென்றது மற்றும் வட மத்திய கடற்படை கட்டளை பெண்கள் சாம்பியன்ஷிப்பை வென்றது.

இதன்படி, இலங்கை கடற்படை கப்பல் தம்பபண்ணி நிறுவனத்தில் ஆரம்பமாகி ஆனமடுவவிலிருந்து நிகவெரட்டிய வரை மொத்தம் 88 கி.மீ தூரத்தைச் சென்று ஆரம்பமான இடத்திலயே நிறைவடைந்த ஆண்கள் பிரிவு போட்டிக்காக 72 போட்டியாலர்கள் கலந்துகொண்டனர். மேலும் தம்பபண்ணி நிறுவனத்தில் ஆரம்பமாகி கல்அடிய, வெல்லன்குளம் வரை மொத்தம் 20 கி.மீ தூரத்தைச் சென்று ஆரம்பமான இடத்திலயே நிறைவடைந்த பெண்களுக்கான போட்டியில் முப்பத்திரண்டு (32) வீராங்கனைகள் கலந்துகொண்டனர். அதன் படி ஆண்கள் பிரிவில் வடமத்திய கடற்படை கட்டளையை பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை வீரர் எல்.பி.என்.சி.நந்தசிறி முதலாம் இடத்தையும், கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர் பி.எச்.ஏ.ஆர்.சாமர இரண்டாம் இடத்தையும், தென் கடற்படை கட்டளையை பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை வீரர் டி.பி.ஏ.டி.என். வீரகோன் மூன்றாவது இடத்தையும் வெற்றி பெற்றனர்.

பெண்கள் பிரிவில் முதலிடத்தை பயிற்சி கட்டளையை பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை வீராங்கணை எச்.பி.எஸ்.மதுமாலி பெற்றுள்ளதுடன் இரண்டாம் இடத்தை வடமத்திய கடற்படை கட்டளையை பிரதிநிதித்துவப்படுத்திய ஆர்.எம்.ஐ.டி.ராஜகுரு பெற்றுள்ளார், மேலும், வட மத்திய கடற்படை கட்டளையை பிரதிநிதித்துவப்படுத்திய ஆர்.ஜி.டி.பி.எச்.விக்கிரமசிங்க மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார்.

இதன்படி, 2024 இன் கட்டளைகளுக்கு இடையேயான சைக்கிள் ஓட்டுதல் போட்டித்தொடரில், ஆண்கள் அணி சாம்பியன்ஷிப் மற்றும் அதன் இரண்டாம் இடத்தை கிழக்கு கடற்படை கட்டளையும் பெண்கள் அணி சாம்பியன்ஷிப் மற்றும் இரண்டாம் இடத்தை வட மத்திய கடற்படை கட்டளையும் வென்றது.

மேலும், வடமேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் தம்மிக்க விஜேவர்தனவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்காக கடற்படை சைக்கிள் ஓட்டுதல் குழுவின் தலைவர் கொமடோர் அனுருத்த கருணாதிலக உட்பட கடற்படை சைக்கிள் ஓட்டுதல் அணி மற்றும் கடற்படை கட்டளைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் கலந்து கொண்டனர்.