பதின்மூன்றாவது பாதுகாப்பு சேவை விளையாட்டுப் போட்டித்தொடர் பனாகொடவில் பிரமாண்டமான முறையில் ஆரம்பமானது
பதின்மூன்றாவது பாதுகாப்பு சேவை விளையாட்டுப் போட்டித்தொடர் 2024 செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி பனாகொட இராணுவ முகாம் வளாகத்தின் உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பிக்கப்பட்டதுடன், இந்நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா கலந்து கொண்டார்.
தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு சாதனைகளை தாய்நாட்டிற்கு கொண்டு வருவதற்கு முப்படை பிரதிநிதித்துவப்படுத்தப்படும் விளையாட்டு வீரர்கள் சிறப்பான பங்களிப்பை வழங்குகின்றனர். இதன்படி, பதின்மூன்றாவது தடவையாக நடைபெறவுள்ள 2024/2025, பாதுகாப்புச் சேவைகள் விளையாட்டுப் போட்டித்தொடர் முப்படைகளின் திறமையான புதிய விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு, அதன் மூலம் எதிர்காலத்தில் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் இந்த விளையாட்டு வீரர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கும்.
இலங்கை கடற்படையின் விளையாட்டு துறையின் முன்னேற்றத்திற்காக, கடற்படை விளையாட்டுச் சபையின் தலைவரான வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் கடற்படை விளையாட்டு வீரர்களுக்கு பாதுகாப்பு சேவை மட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த தேவையான திறன்களை வெளிப்படுத்த கடற்படை விளையாட்டு வீரர்கள் திறன்களைக் கொண்டிருப்பதுடன், இதன் மூலம் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான சாதனைகளை எதிர்காலத்தில் தாய்நாட்டிற்கு கொண்டு வர முடியும்.
இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே தலைமையில் நடைபெற்ற 13ஆவது பாதுகாப்புச் சேவைகள் விளையாட்டுப் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வுக்கு விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ உட்பட முப்படைகளின் சிரேஷ்ட மற்றும் இளநிலை அதிகாரிகள் மற்றும் முப்படையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் விளையாட்டு வீரர்களும் கலந்துகொண்டனர்.