‘Commandant’s Cup Sailing Regatta - 2024’ திருகோணமலையில் வெற்றிகரமாக முடிவடைந்தது

திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியின் ஏற்பாட்டில் நான்காவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட ‘Commandant’s Cup Sailing Regatta - 2024’ படகோட்டப் போட்டித்தொடர், 2024 ஆகஸ்ட் 18 ஆம் திகதி முதல் நான்கு (04) நாட்கள் திருகோணமலை, Sandy Bay கடற்கரையில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன், போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் கோப்பைகள் வழங்கல் இன்று (2024 ஆகஸ்ட் 21) கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் தளபதி கொமடோர் ரொஹான் ஜோசப்பின் அழைப்பின் பேரில், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் தலைமையில், திருகோணமலை கடற்படை கப்பல்துறை Sandy Bay கடற்கரையில் நடைப்பெற்றது.

இலங்கை படகோட்டம் சங்கத்தின் (Yachting Association of Sri Lanka - YASL) மேற்பார்வையின் கீழ் Open Championship ILCA 6, Cup Championship, Cup Championship Enterprise மற்றும் Cup Championship ILCA 6 என்ற நான்கு (04) பிரிவுகளின் கீழ் நடைபெற்ற இந்தப் போட்டித்தொடருக்காக சீனாவின் டாலியன் கடற்படை அகாடமி (Dalian Naval Academy - China), இந்திய கடற்படை அகாடமி (Indian Naval Academy), பாகிஸ்தான் கடற்படை அகாடமி (Pakistan Naval Academy) மற்றும் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியை பிரதிநிதித்துவப்படுத்தும் இருபத்தி இரண்டு (22) பயிற்சி பெரும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதன்படி, Open Championship ILCA 6 பிரிவின் இலங்கை கடற்படையின் லெப்டினன்ட் (சுழியோடி) ஏ.கே.டி.எஸ் டி சொய்சா முதலாம் இடத்தையும், இரண்டாம் இடத்தை லெப்டினன்ட் கமாண்டர் (கடற்படை காலாட்படை) என்.ட.பி லொகுலியனவும், மூன்றாம் இடத்தை லெப்டினன்ட் கமாண்டர் (பிடப்ஓ) பிபீஎம் பெர்னாண்டோவும் பெற்றனர்.

Cup Championship பிரிவின் பாகிஸ்தான் கடற்படை அகாடமியின் கெடட் அதிகாரிகள் பிரிவில் முதலாம் இடத்த Syed Sakhir Ali Shah, Saad Bin Khalid மற்றும் Muhammad Abdullah Akram ஆகியோர் பெற்றதுடன், இரண்டாம் இடத்தை இந்திய கடற்படை அகாடமியின் கேடட் அதிகாரிகளான P Kalyan Reddy, Boddapu Harish மற்றும் Japman Avtar பெற்றனர், மூன்றாம் இடத்தை சீன கடற்படை அகாடமியின் கேடட் அதிகாரிகளான Chen Zhi Hang, Xu Jia Hao மற்றும் Deng Kuang Heng பெற்றனர்.

Cup Championship Enterprise பிரிவில் முதலாம் இடத்தை பாகிஸ்தான் கடற்படை அகாடமி கெடட் அதிகாரிகளான Saad Bin Khalid மற்றும் Muhammad Abdullah Akram ஆகியோர் வென்றனர். அந்த வகையில் இரண்டாவது இடத்தை இந்திய கடற்படை அகாடமியின் கெடட் அதிகாரிகளான Boddapu Harish மற்றும் Japman Avtar, பெற்றதுடன் மூன்றாவது இடத்தை சீன கடற்படை அகாடமியின் கெடட் அதிகாரிகளான Xu Jia Hao மற்றும் Deng Kuang Heng பெற்றனர்.

Cup Championship ILCA 6 பிரிவின் முதலாம் இடத்தை இந்திய கடற்படை அகாடமியின் கேடட் அதிகாரி P Kalyan Reddy வென்றார், அந்த பிரிவில் இரண்டாம் இடத்தை பாகிஸ்தான் கடற்படை அகாடமியின் கேடட் அதிகாரி Syed Sakhir Ali Shah மற்றும் அந்த பிரிவில் மூன்றாம் இடத்தை சீன கடற்படை அகாடமியின் கேடட் அதிகாரி Chen Zhi Hang மூன்றாவது இடத்தைப் பிடித்தனர்.

இவ்வாறான போட்டிகளை நடத்துவதன் மூலம், வெளிநாட்டு கடற்படை அகாடமிகளில் பயிற்சி பெறும் அதிகாரிகள் மற்றும் இலங்கை கடற்படையின் பயிற்சி அதிகாரிகளுக்கு இடையில் ஒத்துழைப்பையும் அனுபவப் பரிமாற்றத்தையும் மேம்படுத்துவதுடன், நாட்டில் நீர் விளையாட்டுகளை பிரபலப்படுத்தவும், சுற்றுலாவை நீர் விளையாட்டுகளுக்கு ஈர்க்கவும் கடற்படை எதிர்பார்க்கிறது.

மேலும், இந் நிகழ்வுக்காக கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் காஞ்சன பானகொட, கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியாக பதவியேற்கவுள்ள ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, பயிற்சிப் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே கடற்படை தலைமையகத்தின் மற்றும் கிழக்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகள் சீன, இந்திய மற்றும் பாகிஸ்தான் கடற்படை அகாடமிகளின் சிரேஷ்ட அதிகாரிகள், இலங்கை பாய் படகுகள் சங்கத்தின் (Yachting Association of Sri Lanka - YASL) உறுப்பினர்கள், கடற்படை படகோட்டம் பிரிவின் உறுப்பினர்கள் மற்றும் கடற்படை வீரர்கள் கலந்து கொண்டனர்.