நீர்கொழும்பு சர்வதேச தரவரிசை செஸ் சாம்பியன்ஷிப் 2024ல் இரண்டாம் இடத்தை கடற்படை வென்றது

இலங்கை செஸ் சம்மேளனத்துடன் இணைந்து கம்பஹா மாவட்ட செஸ் சங்கம் ஏற்பாடு செய்த எட்டாவது (08) நீர்கொழும்பு சர்வதேச தரவரிசை செஸ் சாம்பியன்ஷிப் போட்டித்தொடர், 2024 ஆகஸ்ட் 15 முதல் 19 வரை கம்பஹா, ஜா எல, வெட் வாட்டர் ரிசார்ட்டில் நடைபெற்றதுடன், அங்கு இரண்டாவது இடத்தை கடற்படை வென்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு திறமையான 451 செஸ் வீரர்கள் பங்கேற்ற இந்த செஸ் சாம்பியன்ஷிப் போட்டித்தொடரில் இலங்கை கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கு பற்றிய கடற்படை வீரர் எஸ்.டபில்யூ.ஜி.எம்.சி.டி.கே.பி விஜேகோனினால் முழுப் போட்டியிலும் இரண்டாம் இடத்தை வெள்ள முடிந்தது.