Sri Lanka Sports Fiesta Colombo 2024 - Mini Football Championship போட்டித்தொடரில் இரண்டாம் இடத்தை இலங்கை கடற்படை மகளிர் கால்பந்து அணி வென்றது

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட Sri Lanka Sports Fiesta Colombo 2024 போட்டித்தொடருடன் இணைந்து நடைபெற்ற Mini Football Championship கால்பந்து போட்டித்தொடர் 2024 ஆகஸ்ட் 16 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை கொழும்பு குதிரை பந்தய மைதானத்தில் நடைபெற்றதுடன் அதன் பெண்களுக்கான இரண்டாம் இடத்தை இலங்கை கடற்படை மகளிர் கால்பந்து அணி வென்றது.

இதன்படி, 06 மகளிர் கால்பந்து அணிகள் இச்சுற்றுப்போட்டியில் பங்குபற்றியதுடன், போட்டியின் இறுதிப் போட்டி கடற்படை மகளிர் அணி மற்றும் ரினவுன் மகளிர் அணி இடையில் இடம்பெற்றன. கடுமையான போட்டியின் பின்னர், ரினவுன் மகளிர் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது, மற்றும் கடற்படை பெண்கள் அணி Sri Lanka Sports Fiesta Colombo 2024 - Mini Football Championship போட்டித்தொடரில் இரண்டாம் இடத்தை வென்றது.

அத்துடன் கடற்படையின் கால்பந்து பிரிவின் தளபதி கொமடோர் பிரதீப் கருணாதிலக்க உள்ளிட்ட அதிகாரிகள் குழுவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.