கடற்படை வீரர் ஆர்.எம்.என்.ரத்நாயக்க ‘Mr. Novice - 2024’ உடற்கட்டமைப்பு போட்டித் தொடரில் பல வெற்றிகளை பெற்றார்

இலங்கை உடற்கட்டமைப்பு சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘Mr Novice - 2024’ உடற்கட்டமைப்பு போட்டித் தொடர் 2024 ஜூலை 28 ஆம் திகதி தெஹிவளை எஸ் த எஸ் ஜெயசிங்க ஞாபகார்த்த அரங்கில் நடைபெற்றதுடன், இதில் கடற்படை வீரர் ஆர்.எம்.என் ரத்நாயக்க பல வெற்றிகளைப் பெற்றார்.

அதன்படி, இலங்கையின் பிரபல உடற்கட்டமைப்பு கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல உடற்கட்டமைப்பு வீரர்கள் கலந்துகொண்ட Mr Novice - 2024 போட்டித் தொடரில் 80 கிலோ கிராம் எடைப் பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தி அந்த பிரிவில் முதலிடத்தையும், Title போட்டி நிகழ்வில் இரண்டாம் இடத்தையும், Men Physique போட்டி நிகழ்வில் மூன்றாம் இடத்தையும் கடற்படை வீரரான ஆர்.எம்.என்.ரத்நாயக்க பெற்றுள்ளார்.

மேலும், இலங்கை உடற்கட்டமைப்பு சம்மேளனத்தின் பிரதிநிதிகள் மற்றும் கடற்படை உடற்கட்டமைப்பு பிரிவின் தலைவர் கமாண்டர் நிரங்க பெரேரா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.